மாணவர்களை திரும்ப அழைக்க மாட்டோம்- பாகிஸ்தான் அறிவிப்பு!

மாணவர்களை திரும்ப அழைக்க மாட்டோம்- பாகிஸ்தான் அறிவிப்பு!

Share it if you like it

கொரொனா வைரஸ் நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில். சீனாவில் மேற்படிப்பிற்காக சென்றுள்ள இந்திய மாணவர்களை மத்திய அரசு தனி கவனம் செலுத்தி மீட்டு வந்து விட்டது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த 800 மாணவர்களை சீனாவில் இருந்து மீட்டு வரமாட்டோம், என்று பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் நேரடியாகவே கூறியிருப்பது.

உலக நாடுகளை மட்டுமில்லாமல் மாணவர்களின் குடும்பத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் பெண்களை சீனாவைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டு அடிமைப்படுத்துவதும் , பாலியல் தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி  லட்சக் கணக்கான வீகர் இசுலாமியர்களை சீனா சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்துவதை கண்டு  பாகிஸ்தான் கள்ள மவுனமாகவே இருந்து வருகின்றது.

மேலும்  அவர்களின் வழிபாட்டு தலங்கள், குரான் முதற்கொண்டு அனைத்திலும்  அந்நாடு  தங்கள்  விருப்படி மாற்றியிருப்பதும், இன்னும் சில  ஆண்டிற்குள் அந்த மதத்தில் இருந்து படிப்படியாக வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளது.

இஸ்லாமியர்கள் எவ்வளவு நீளம் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரொனா வைரஸ்  பாதித்துள்ள பகுதிகளில் உள்ளவர்களை  மீட்க மாட்டோம், என்று கூறியிருப்பதை அடுத்து பாகிஸ்தான் மக்களுடன் சேர்ந்து உலகின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களும்  சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 


Share it if you like it