ரியல்மீ ஏர்பட்ஸ் மற்றும் ரியல்மீ X2 இன்று வெளியாகிறது

ரியல்மீ ஏர்பட்ஸ் மற்றும் ரியல்மீ X2 இன்று வெளியாகிறது

Share it if you like it

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் கோலோச்சிவருகின்றன. குறிப்பாக பட்ஜெட் செக்மண்டில் குறுகிய காலத்திற்குள் ரெட்மி நிறுவனத்தின் இடத்தை அசைத்துப்பார்த்தது ரியல்மீ. இந்நிலையில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்பீக்கர், ஏர்பட்ஸ் என மற்றத்துறைகளிலும் கால்பதித்துள்ளது ரியல்மீ. ரியல்மீ ஏர்பட்ஸ் மற்றும் ரியல்மீ X2 ஸ்மார்ட்போன் இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தப்படுவுள்ளன. இரண்டும் பண்டிகைக்கால சலுகைகளுடன் விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில மாதத்திற்கு முன்னர் ரியல்மீ XT வெளியானது, அதன் அப்கிரேடாக தான் ரியல்மீ X2 இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மீ X2 ஸ்மார்ட்போனில் ஸ்னேப்டிராகன் 730ஜி சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்க கேமரா 32 மெகாபிக்சலுடன் 30W பாஸ்ட்சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. மெமரியை பொறுத்து இரண்டுவிதமான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன 6 GB RAM  ஆனது 19,999 ரூபாய் எனவும் 8 GB RAM ஆனது 20,999 ரூபாய் எனவும் நிர்ணிக்கப்பட்டுள்ளது. ஏர்பட்ஸ் விலையானது 4,999 ரூபாய் என இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it