ஜெர்மனி, ஜப்பானையும் முந்தி கொண்டு இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடக மாறும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில் ஜெர்மனியையும் 2034 ஆண்டுக்குள் ஜப்பானையும் முந்தும் வல்லமை இந்தியாவிற்கு உண்டு என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சர்வதேச நாணய நிதியத்தால் 133.4 கோடியாக மதிப்பிடப்பட்டது. இது சீனாவின் 139.7 கோடிக்கும் குறைவாக இருந்தது. ஆனால் சீனாவின் மக்கள் தொகை திறம்பட கட்டுக்குள் வந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.3 சதவீதம் வளர்ந்து வருகிறது. 2050 ஆம் ஆண்டில் 170 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாற உள்ளது. ஆனால் உழைக்கும் வயதினர் சீன மக்கள் தொகையில் வீழ்ச்சியடைந்து வருகின்றனர். இந்தியாவில் 100 கோடி கூடுதல் மக்கள் தொழிலாளர் சக்தியில் நுழைகிறார்கள்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருடாந்திர விகிதங்கள் 2018-23 முதல் 7.1 சதவீதம், , 2023-28லிருந்து 7.1 சதவீதம் மற்றும் 2028-33 முதல் 7.1 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தியா தற்போது உலகின் 7வது பெரிய பொருளாதார நாடாகும். சமீபத்திய தரவுகளின் படி, இந்தியா 2017ல் பிரான்சை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்திற்கு முந்தியது. இந்த ஆண்டு உலக பொருளாதார லீக் அட்டவணையில் இந்தியா 5-வது இடத்தை எட்டும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இது 2019ல் நடக்கும் என்று தெரிகிறது. 2025ம் ஆண்டில் இந்தியா, ஜெர்மனியையும் 2030ம் ஆண்டில் ஜப்பானையும் முந்திக்கொண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறப்பட்டு உள்ளது.