1. 4மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு
ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும், கண்ட நேரத்தில்
கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
3. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த
வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.
4. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல்
நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள் கொழுப்பைக் குறைக்கும், தொப்பையைக் கரைக்கும் உணவை நன்றாக மென்று
பொறுமையாக உண்ணுங்கள்.
5. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது, உண்ட உணவு
முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த திட உணவு கூடாது.
6. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.
7. இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்…