அண்மையில் ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீர மரணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் வீர மரணம் அடைந்த மதியழகன் அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வழங்க ஆணையிட்டுள்ளார். எனது கணவர் நாட்டிற்காக உயிர் இழந்தது பெருமையாக உள்ளது என்று ராணுவ வீரரின் மனைவி கூறியுள்ளார். எனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சேலத்தைச் சேர்ந்த வீரர் திரு.மதியழகன் அவர்கள் வீர மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
வீரமரணமடைந்த மதியழகன் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, ரூ20 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/SueT28bGZM
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 5, 2020
#IndianArmy#LtGenYKJoshi, #ArmyCdrNC and all ranks salute the supreme sacrifice of Hav Mathiazhagan P; offer deepest condolences to the family.@adgpi@SpokespersonMoD@Whiteknight_IA pic.twitter.com/MoOhn38VLZ
— NorthernComd.IA (@NorthernComd_IA) June 5, 2020