வேல் பூஜைக்கு கிடைத்த வெற்றி..! ஹிந்துக்களின் எழுச்சியை கண்டு ஆடிப்போன சூரிய குடும்பம்…!

வேல் பூஜைக்கு கிடைத்த வெற்றி..! ஹிந்துக்களின் எழுச்சியை கண்டு ஆடிப்போன சூரிய குடும்பம்…!

Share it if you like it

முன்பை போல திமுக ஹிந்துக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாத சூழ்நிலை தற்பொழுது தமிழகத்தில் எழுந்துள்ளது. சமீப காலமாக ஹிந்துக்களிடையே ஒற்றுமை  அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்பது நிதர்சனமான உண்மை.

முருக பெருமானை இழிவுப்படுத்திய திமுகவின் கறுப்பர் கூட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து திமுகவே அறிக்கை வெளியிடும் நிலைக்கு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதோடு மட்டுமில்லாமல் வேல் பூஜை தமிழக மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

ஹிந்துக்களின் ஓட்டு வங்கி உருவாகும் பொழுது, திமுக பஜனை பாடும் என்று பிரபல பத்திரிக்கையாளர் கூறியது தற்பொழுது நடக்க துவங்கியுள்ளதை உணர முடிகிறது. இதன் தொடர்ச்சியாக, சூரிய குடும்பத்தின் வாரிசு உதயநிதி, தனது டுவிட்டர் பக்கத்தில். விநாயக பெருமானின் சிலை இருக்கும், புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதன் மூலம். ஹிந்துக்களின் பலத்தை திமுக தற்பொழுது உணர துவங்கியுள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it