சைவ உணவுகளுக்கும் “ஹலால்” சான்றிதழ்..! ஹலால் பொருளாதாரமும் அதன் அரசியலும்..!

சைவ உணவுகளுக்கும் “ஹலால்” சான்றிதழ்..! ஹலால் பொருளாதாரமும் அதன் அரசியலும்..!

Share it if you like it

நீங்கள்  நினைப்பது போல் “ஹலால்” சான்றிதழ் வெறும் அசைவ உணவுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் சான்றிதழ் அல்ல..!

• நீங்கள் அன்றாட உண்ணும் சைவ பேக்கரி உணவு வகைகள் மற்றும் மருந்து வகைகளுக்கும் வழங்கப்படுகிறது. (எ.டு) மைதா, பருப்பு வகைகள், காய்கறி, பழங்கள், பேக்கரி பொருட்கள், மருந்துக்கள் என நீளும்.,

• நீங்கள் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களுக்கும் வழங்கப்படுகிறது., (எ.டு) லிப்ஸ்டிக், ஐலைனர், மாய்ஷரைசர், முகக்கிரீம், ஷாம்பு.,

• நீங்கள் அணியும் காலணிகள் மற்றும் இன்ன பிற தோல் சார்ந்த பொருட்கள்.,

• நீங்கள் வசிக்கும் வீடுகளுக்கும், அபார்ட்மெண்ட்களுக்கும் கூட வழங்கப்படுகிறது. ஏன்? நீங்கள் செல்லும் சுற்றுலா கூட “ஹலால்” சான்றிதழ் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளது.

சற்றே தலைசுற்றுவது போல உள்ளதா? ஆம் இது உண்மை தான். சைவ உணவிற்கும், மருந்திற்கும், அழகு சாதன பொருட்களுக்கும், காலில் அணியும் செருப்பிற்கும் எதற்கு “ஹலால்” சான்றிதழ்?

சைவ உணவு மற்றும் மருந்துக்கள் “ஹராம்” எனப்படும் தடை செய்யப்பட்ட விலங்குகள் தீண்டாமலும்; அவை மேயப்பட்ட நிலத்தில் விளைச்சல் செய்யப்படாமலும்; அவை “ஷரியா” எனப்படும் இஸ்லாமிய மதத்தால் வரையறுக்கப்பட்ட பதப்படுத்துதல் முறைகளால் சேமிக்கப்பட்டும்; “ஹலால்”அற்ற முறையில் கொல்லப்பட்ட விலங்குகளின் கொழுப்பு சேர்க்காமல் இருந்தாலும் அது இஸ்லாமிய முறையில் உள்ளது எனப்பொருள், ஆகவே அதற்கு “ஹலால்” சான்றிதழ் வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதுவே தான் அழகு சாதன பொருட்களுக்கும்.

சுமார் 25000 கோடிகள் (3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்  வரை புழங்கும் தோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறை இன்று மெதுவாக “ஹலால்” போர்வையில் இஸ்லாமியர்களை நோக்கி பயணிக்கிறது. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு வரை தோல் சார்ந்த தொழில்கள் அனைத்து மதத்தவரும், சமூகதவரும் செய்தனர். ஆனால் இப்போது நீங்கள் கூர்ந்து கவனித்தால். அது பெரும்பாலும் ஒரு சமூகத்தின் வசமே உள்ளது. இதற்கு மறைமுக காரணம் “ஹலால்” சான்றிதழ், இறைச்சி வாணிபம் கிட்டத்தட்ட அவர்களிடம் உள்ள காரணத்தால், அது சார்ந்த தோல் தொழில்கள் (எ.டு) காலணி, துணி மற்றும் பை/பெல்ட்/பர்ஸ் பெரும்பாலும் அவர்களிடமே இருப்பது ஆச்சரியமில்லை.

கடைசியாக கட்டுமானத்துறை, சமீபதில் கொச்சி மற்றும் பெங்களூருவில் “ஹலால்” கட்டுமானம் தன் வேர்களை பரப்பி வருகிறது. அதாவது “ஹலால்” முறைப்படி வீடோ அல்லது கடையோ கட்டப்படுகிறது, இது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. ஒரு வேலை இஸ்லாமியர்களிடம் மட்டுமே பொருட்கள் வாங்கி, அவர்களை மட்டுமே கொண்டு கட்டுமானம் செய்ய வேண்டுமோ என்னமோ. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய அடிபடைவாதிகள் நம் கண் முன்னேயே நமக்கு தெரியாமலேயே ஒரு இணையொத்த பொருளாதாரத்தை கட்டமைத்துக்கொண்டு இருக்கிறார்கள் .

இதை நீங்கள் உணர ஒரு சிறு சமூக சோதனையை உங்கள் சிந்தைக்கு உட்படுத்துகிறேன்., சில வருடங்களுக்கு முன்பு வரை அசைவ உணவகம் என்றால் அது ‘முனியாண்டி விலாஸ்’, ‘செட்டிநாடு மெஸ்’ அல்லது ‘மிலிட்டரி ஹோட்டல்’, ஆனால் இன்றோ, அது ‘பிரியாணி’? செயற்கையாக ‘பிரியாணி’க்கு ஒரு கிராக்கி ஏற்பாடுத்தி அசைவம் என்பதே ‘பிரியாணி’ தான் என்றாகிப்போனது, ‘முனியாண்டி விலாஸ்’ காணாமல் போனது.

இந்தியாவில் உள்ள பிற சமூகங்களின் வாழ்வாதாரத்தை ‘ஹலால்’ என்ற போர்வையில் சிறுகச் சிறுக அபகரித்து, ஒரு சாரார் மட்டுமே சார்ந்த பொருளாதார ஏகாதிபத்திய நிலையை உருவாகக்கும் முயற்சிகள் நம் கண்களுக்கு முன்பே நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இது உடனே நடக்காது, ஒரு 20, 25 அல்லது 30 வருடங்களில் கூட நடக்கலாம். அதற்கான பல எடுத்துக்காட்டுகளை நாம் பார்த்தோம். இது பெரும் சுனாமியாக உருவெடுக்கும் முன், இதைப் பற்றி நாம் சற்றே  சிந்திக்க வேண்டியுள்ளது. சிந்திப்போம்!!

https://mediyaan.com/%e0%ae%b9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4/

 


Share it if you like it