ஐந்து மாநில தேர்தல் – முதல் வேட்பாளர் பட்டியலை வெளிட்டது பாஜக

ஐந்து மாநில தேர்தல் – முதல் வேட்பாளர் பட்டியலை வெளிட்டது பாஜக

Share it if you like it

மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5- மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான யூகங்களை பாஜக வகுத்து வரும் நிலையில் நேற்று (புதன்கிழமை)பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு 39 வேட்பாளர்களையும் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கருக்கு 21 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது.


Share it if you like it