50 ஆயிரம் நெல் மூட்டைகள் ”அம்போ’ வாய் திறப்பாரா அய்யாக்கண்ணு?

50 ஆயிரம் நெல் மூட்டைகள் ”அம்போ’ வாய் திறப்பாரா அய்யாக்கண்ணு?

Share it if you like it

தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கு ! 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் ! கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள சி.கீரனூர் என்ற கிராமம். அங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் சுற்று வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் தாங்கள் அறுவடை செய்திருந்த நெல்மணிகளை கொண்டு வந்து குவியல், குவியலாக வைத்திருந்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள சி.கீரனூர் என்ற கிராமம். அங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் சுற்று வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் தாங்கள் அறுவடை செய்திருந்த நெல் மூட்டைகளை குவித்து வைத்து இருந்தனர்.

விவசாயிகள் தங்களிடம் உள்ள மூட்டைகளை குவிக்க தொடங்கியதன் காரணமாக டன் கணக்கில் நெல் மூட்டைகள் குவிந்தது. இதனை தொடர்ந்து நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அவ்வப்போது பெய்து வந்த கனமழை காரணமாக 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகியுள்ளது.

இதனால் கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் மழையால் சேதமடைந்ததை கண்டு விவசாயிகள் கண்ணீர் விட்டு வருகின்றனர். இது பற்றி நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும்  விவசாயிகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it