கேரள மாநிலம் கோழிகோட்டினை சேர்ந்த நபர் ஓடும் பேருந்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோழி கோட்டினை சேர்ந்தவன் ஷாவத் ஷா. இவன், அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு இருக்கிறான். அப்போது, அவன் அருகில் இரண்டு சிறுமிகள் அமர்ந்து இருந்தனர். இந்த நிலையில், தனது பேண்ட் ஜீப்பை கழற்றி ஒழுங்கீனமாக நடந்து கொண்டு இருக்கிறான். இதனால், அதிர்ச்சியடைந்த அச்சிறுமி கண்டக்டரிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். மேலும், ஷாவத் ஷாவிடம் வாக்குவாதம் செய்வதை காணொளியாக பதிவு செய்து உள்ளார். இதையடுத்து, பஸ் கண்டக்டர் பேருந்தை காவல் நிலையத்திற்கு விடுமாறு ஒட்டுனரிடம் முறையிட்டு இருக்கிறார். இதையடுத்து, ஷாவத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க கண்டக்டர் முயன்று இருக்கிறார். ஆனால், அவன் தப்பியோடிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.