மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் தகுதி நீக்கம்!

மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் தகுதி நீக்கம்!

Share it if you like it

கோவை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாநகராட்சி 97-வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் நிவேதா சேனாதிபதி. தி.மு.க.வைச் சேர்ந்த இவர், கடந்தாண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (7,786) வெற்றி பெற்றவர். மேலும், 23 வயதாகும் இவர்தான், கோவை மாநகராட்சியின் இளம் கவுன்சிலர் என்கிற பெயரை பெற்றிருந்தார். இவரது தந்தை மருதமலை சேனாதிபதி, தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர் என்பதால், நிவேதாவை மேயராக்க தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால், மேயர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அப்செட்டான நிவேதா, பதவியேற்ற சிறிது காலத்திலேயே சிவில் சர்வீஸ் படிக்கச் சென்று விட்டார். இதன் காரணமாக, நிவேதா வார்டு பக்கமும் எட்டிப் பார்க்கவில்லை, மாமன்ற கூட்டத்திலும் பங்கேற்பதில்லை.

இவ்வாறு, மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து 3 முறை கலந்து கொள்ளாததால், நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதாவது, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ச்சியாக 3 கூட்டங்களில் நிவேதா பங்கேற்காததால், மாநகராட்சி சட்டம் 1998 பிரிவு 32(1)-ன் படி தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. ஆகவே, இச்சட்டத்தின்படி நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல, 95-வது வார்டு கவுன்சிலர் அப்துல் காதர் என்பவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த 4 மாதங்களாக கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. எனினும், இம்மாதம் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், உரிய விளக்கம் அளித்ததால், அவர் கவுன்சிலராக தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it