டாஸ்மாக்கால் தொல்லை… சொந்த வீட்டுக்கு பூட்டு!

டாஸ்மாக்கால் தொல்லை… சொந்த வீட்டுக்கு பூட்டு!

Share it if you like it

குடியிருப்புக்கு மத்தியில் இருக்கும் டாஸ்மாக் கடையால், பொதுமக்கள் தங்களது சொந்த வீட்டுக்கு பூட்டுப் போட்டுவிட்டு, வாடகை வீட்டில் குடியேறும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுத்தெருவை ஒட்டியுள்ள பள்ளிக்கூடத்தான் தெருவில் கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. பொதுவாக, டாஸ்மாக் கடைகள் கடை வீதிகளில் இருக்கும் நிலையில், இந்தக் கடை மக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. இதனால், இக்கடையில் மதுபானம் வாங்கும் குடிமகன்கள், அங்கிருக்கும் வீடுகளின் வராண்டாக்களில் அமர்ந்தும், வீட்டு வாசலில் நின்று கொண்டும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

மேலும், குடித்துவிட்டு பிளாஸ்டிக் டம்ளர், காலி தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றையும் வீடுகளின் முன்பே போட்டு விட்டுச் செல்கின்றனர். அதோடு, அவ்வப்போது குடிமகன்கள் குடித்துவிட்டு மட்டையாகும் சம்பவங்களும் அரங்கேறின. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த அவலநிலை குறித்து டாஸ்மாக் மற்றும் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த குடியிருப்பு வாசிகள், தங்களது சொந்த வீட்டை காலி செய்து பூட்டுப் போட்டுவிட்டு, வாடகை வீட்டில் குடியேறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


Share it if you like it