முருகக் கடவுளை இழிவுபடுத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்… வேலூர் இப்ராஹிம் வலியுறுத்தல்!

முருகக் கடவுளை இழிவுபடுத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்… வேலூர் இப்ராஹிம் வலியுறுத்தல்!

Share it if you like it

ஹிந்து கடவுள் முருகப் பெருமானை இழிவுபடுத்திய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வேலூர் இப்ராஹிம் வலியுறுத்தி இருக்கிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த, சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியில் பேசிய, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், “முருகன் (ஹிந்து கடவுள்) சர்க்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காக தினை மாவு சாப்பிட்டார். அவர் 2 திருமணம் செய்து கொண்டார். இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி, 2 திருமணம்தான்” என்றார். இதைக் கேட்டு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கிண்டலாக ஜோதியலாக பேசுகிறேன் என்று சமாளித்தார்.

எனினும், அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், இதற்கு பதிலடி கொடுத்து தமிழக பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “உவமான, உவமேயங்களுக்கு  ஆன்மிக எதிர்ப்பாளர்கள் ஏன் கடவுள்களை குறிப்பிட வேண்டும்? அதோடு, க‌ட‌ந்த காலத்தை ஏன் குறிப்பிட வேண்டும்? நிகழ் காலத்தில் இல்லாத சான்றுகளா? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா? சாதாரணமாக, கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர் கருணாநிதியையே குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே? தினை மாவை எங்கே வாங்கினார் என்பதையும் சேர்த்து சொல்லுங்களேன்” என்று ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளர் வேலுார் இப்ராஹிம் அளித்த பேட்டியில், “தமிழக வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தரம் தாழ்ந்து, ஹிந்துக் கடவுள் முருகனை இழிவாக பேசியிருக்கிறார். சுய நினைவோடு உள்ளவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள். தான் சார்ந்த சமயத்தையே கொச்சைப்படுத்தி அவர் பேசி இருக்கிறார். அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆக, அஞ்சு வருஷம் ஆட்சி முடியுற வரைக்கும், ‘இன்னைக்கு யாரு, என்ன வம்பை இழுத்துட்டு வருவாங்களோ’ன்னுதான் முதல்வர் காலத்தை ஓட்டணும் போல” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it