அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

Share it if you like it

அப்துல் கலாம்

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு” (குறள்)

 பொருள் – ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறம் அல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறை படாத மானத்தை உடையவனே, சிறந்த அரசன் ஆவான்.

இந்தக் குறளின் மூலமாக, ஒரு நாட்டின் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது, தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இந்தக் குறள் மட்டுமல்ல, “வள்ளுவர்” எழுதிய பண்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, கல்வி, அறிவு ஆகிய அத்தனை குறளின் படி வாழ்ந்து, தாய்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று, பாரத தாய் மகனாக வாழ்ந்து, பாரத நாட்டிற்கு பெருமை தேடித் தந்த மாபெரும் மனிதர், தலைசிறந்த விஞ்ஞானி, மிகப்பெரிய தொழில்நுட்ப வல்லுநர், சிறந்த ஆசிரியர், சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், இந்திய ஏவுகணை நாயகன் போன்ற பன்முகத் திறமையாளர், ஐயா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள்.

பிறப்பு:

1936 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15ஆம் தேதி, ஜைனுலாபுதீன்- ஆஷியம்மாவுக்கும் மகனாக, தமிழகத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

கல்வி:

1.அப்துல் கலாம் தனது தொடக்கப் பள்ளியை, ராமேஸ்வரத்தில் தொடங்கினார். இவருடைய குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்ததால், தனது பள்ளி நேரம் போக மற்ற நேரத்தில் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார்.

2. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், தன்னுடைய கல்லூரிப் படிப்பை, திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில், இயற்பியல் பயின்றார். 1954ம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

3.தன்னுடைய கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு, 1955ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் படிப்பை, சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் தொடங்கினார். பின்னர், அதே கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானி ஆக:

1. 1960 ஆம் ஆண்டு, வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில்  (D.R.D.O.), விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கினார்.

2. இந்திய ராணுவத்திற்காக, ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ஐ.எஸ்.ஆர்.ஓ) வில், தனது பணியை தொடங்கினார்.

3. துணைக்கோள் ஏவுகணை குழுவில் ( எஸ்.எல்.வி.), முக்கிய பங்காற்றினார்.

4. 1980ஆம் ஆண்டு, எஸ் எல் வி 111 ராக்கெட்டைப் பயன்படுத்தி, ரோகிணி-1 என்ற துணைக்கோளை, விண்ணில் வெற்றிகரமாக ஏவச் செய்தார். இச்செயலை பாராட்டி, மத்திய அரசு, 1981-ல் பத்ம பூஷன் விருது வழங்கியது.

5. 1963 முதல் 1983 வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில், பல பணிகளை சிறப்பாக செய்தார்.

6. 1999ல், பொக்ரான் அணு ஆயுத சோதனையில், முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவை, அணு ஆயுத வல்லரசாக மாற்றிய அப்துல் கலாம், இந்திய மக்கள் அனைவராலும், இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றுகின்றனர்.

குடியரசுத் தலைவராக:

1. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக, ஜூலை 25ஆம் தேதி 2002ல் பதவி ஏற்றார்.

2. 2007ஆம் ஆண்டு வரை, குடியரசுத் தலைவராக இருந்தவர், ‘மக்களாட்சி கொடுத்த மக்களின் ஜனாதிபதி’ என்று, அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

வாங்கிய விருதுகள்:

1. 1981- பத்ம பூஷன் விருது

2. 1990 – பத்ம விபூஷன் விருது

3. 1997 – பாரத ரத்னா விருது

4. 1998 – வீர சாவர்கர் விருது

5. 2000 – ராமானுஜர் விருது

6. 2007 – அறிவியல் டாக்டர் பட்டம்

7. 2012 – சவரா சம்ஸ்க்ருத புரஸ்கார் விருது

போன்ற பல விருதுகளைப் பெற்று, மாணிக்கம் போல் ஜொலித்தார்.

எழுதிய நூல்கள்:

1. அக்னி சிறகுகள்

2. இந்தியா 2020

3. எழுச்சி தீபங்கள்

4. அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மாமனிதர் திரு ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், 2015 ஆம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி, ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் மேடையில், பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து, இந்த மண்ணுலகை விட்டு, விண்ணுலகம் சென்று, பாரதத் தாயின் பொற் பாதத்தை அடைந்தார்.

இளைஞர்கள், கனவு காணுங்கள். அந்த கனவை நினைவாக்க, பாடுபடுங்கள் என்று கூறிய அவரின் பொன்மொழிகளும், அவர் வாழ்ந்து காட்டிய ஒழுக்கமும், நம் மனதில் என்றும் இருக்கும்.

ஐயா மறைந்தாலும், சாதனையும், படைப்புகளும் என்றுமே மறையாது. ஐயா காட்டிய வழியில் சென்று, நம் தாய் நாட்டின் பெருமையை, இந்த உலகிற்கு அறிய செய்வோம். வந்தே மாதரம்.

  • துர்கா தேவி

Share it if you like it