குடும்பத்தோடு இறங்கி ரஞ்சித் மலத்தை அல்ல வேண்டியதுதானே – சங்கர் குரு சரமாரி கேள்வி?

குடும்பத்தோடு இறங்கி ரஞ்சித் மலத்தை அல்ல வேண்டியதுதானே – சங்கர் குரு சரமாரி கேள்வி?

Share it if you like it

பகவான் ராமரை இழிவுப்படுத்திய விடுதலை சிகப்பியையும், இயக்குனர் ரஞ்சித்தையும் புதிய தமிழகம் கட்சியின் மாநில இணைச் செயலாளர் வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மாநில இணைச் செயலாளர்

பிரபல திரைப்பட இயக்குனர் ரஞ்சித். இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்களை மிக கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். அதேவேளையில், பிரிவினை கருத்துக்களை தனது திரைப்படங்களில் புகுத்தி தனது வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்த கூடிய நபர். இவரது, நெருங்கிய நண்பர் மற்றும் உதவி இயக்குநராக இருப்பவர் விடுதலை சிகப்பி. இவர், அண்மையில் பேசிய காணொளி ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கோவத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இவரது, காணொளியில், ஹிந்து தெய்வங்களை மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சனம் செய்து இருந்தார்.

ஆபாச பேச்சாளர் சிகப்பியின் கருத்திற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் மாநில இணைச் செயலாளராக இருப்பவர் சங்கர் குரு. இவர், பகவான் ராமரை இழிவுப்படுத்திய விடுதலை சிகப்பியையும் அவருக்கு முட்டு கொடுத்த பா.ரஞ்சித்தையும் வெளுத்து வாங்கியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it