அகண்ட பாரதம் – பாரத தேவியின் தன்மானம் சுயமரியாதையின்  மணிமகுடம்

அகண்ட பாரதம் – பாரத தேவியின் தன்மானம் சுயமரியாதையின் மணிமகுடம்

Share it if you like it

பிரபஞ்சத்தின் புண்ய ஷேத்திரமாக விளங்கியது பரம பவித்திரமான பாரத பூமி . தனது ஆன்மீகம் ஞானத்தாலும் பாரம்பரியமான பண்பாடு – கலாச்சாரத்தாலும் உயிர்கள் யாவும் உலகில் உன்னதமான வாழ்வு பெற வழிகாட்டும் ஆலயமாக விளங்கியது. வேதங்கள் பிறந்த பூமி. உபநிஷதங்கள் – புராணங்கள் – இதிகாசங்கள் – ஜோதிடம் – அறிவியல் – மருத்துவம் – கலை- இலக்கியம் – கலாச்சாரம் – வாழ்வியல் தத்துவங்கள் என்று இவ்வுலகிற்கு தேவையான ஆயகலைகள் அத்தனையும் பிறந்து வளர்ந்த புண்ணிய பூமி.

மூவரும் – மூன்று தேவியரும் – முப்பத்து முக்கோடி தேவரும் அரூபமாக உலவும் தர்ம பூமி. பஞ்ச பூதங்கள் – நவ கோள்கள் நின்றாளும் கர்ம பூமி. தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் ஞானிகள் முதல் பறவைகள் விலங்குகள் வரை எண்ணற்ற ஜீவராசிகளும் இறைவழிபாடு செய்து மோட்சமும் – வெற்றியும் கீர்த்தியும் பெற்ற தவ பூமி. பிரம்ம புத்ரா – சிந்து – கங்கா – யமுனா – சரஸ்வதி – கோதாவரி – காவேரி என்று சப்த நதிகள் செழிப்பில், கிழக்கில் கங்கா மஹா சாஹரம் – மேற்கில் சிந்து – சரஸ்வதி மஹா சாஹரம் , தெற்கில் இந்து மஹா சாஹரம் என்று மூன்று கடல்கள் சூழ்ந்த வனப்பில் , வடக்கில் மேதினியில் தானுயர்ந்த வானுயர்ந்த சிகரங்களை கொண்ட இமயத்தின் பேரழெலில் கொஞ்சும் வனப்போடும். கம்பீரத்தோடும் சிம்மவாஹினியாய் ஸ்ரீ சக்ரதாரிணியாய் வீற்றிருந்த பூதேவி மஹா பாரத தேவி. அவளின் செல்வ செழிப்பும், வந்தாரை எல்லாம் அரவணைத்து வாழ வைத்த பெருந்தன்மையும் அந்நியரின் கண்களை உறுத்தியதால் தொடர்ந்து பல்வேறு படையெடுப்புகள் அவளின் செல்வ செழிப்பை சூறையாட தொடங்கியது.

எத்தனை முறை கொள்ளையிட்டாலும் மீண்டும் கொழிக்கும் செல்வம். அள்ள அள்ள அள்ள குறையாத இயற்கை வளம். கல்வி – மருத்துவம்- வியாபாரம் – வர்த்தகம் என்று உயர்ந்த வாழ்க்கைத் தரம் என்ற செழிப்பில் பொறாமை கொண்ட இசுலாமிய – கிறித்தவ கொள்ளையர்கள் இந்த வளங்களை எல்லாம் தனதாக்கிக் கொள்ள இங்கே தங்கள் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று திட்டமிட்டு இந்த மண்ணை மக்களை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள்.

வீரம் – துணிவு மிக்க படைகள், போர் தர்மம் மீறாத தர்மவழியில் அரசாண்ட இந்து மன்னர்கள் என்று வரம்பான வாழ்வியலாளர்களை அராஜகம் – வன்முறை – கொலை – கொள்ளை – பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் கொடூரம் என்ற மாபாதக செயல் கொண்ட கொள்ளையர்கள் தங்களின் சூழ்ச்சி வஞ்சகத்தால் வீழ்த்தி அடிமைப்படுத்தினர்.

இங்குள்ள ஆலயங்களும் கல்வி கூடங்களுமே இம் மண்ணின் மக்களின் ஆத்ம பலம் என்பதை உணர்ந்து அதை முதலில் குறி வைத்து தரைமட்டமாக்கினார்கள். எதிர்த்து நின்ற மண்ணின் மைந்தர்கள் எல்லாம் கொடூரமாக கொல்லப்பட்டனர். போரில் தோல்வியுற்ற இந்திய மன்னர்கள் கொடூரமாக உயிரிழந்தனர். முற்றுகையிடப்பட அரச குல பெண்கள் உயிரினும் மேலான தங்கள் தன்மானம் காக்க ஜோஹர் என்ற புனித தீயில் தங்களை ஆகுதியாக்கிக்கொண்டார்கள். எஞ்சியவர்கள் எல்லாம் கட்டாய மதமாற்றம் மூலம் சொந்த மண்ணில் அடிமையானார்கள்.

முதலில் இசுலாமிய கொள்ளையர்கள் மூலமான தொடர் படையெடுப்பு – ஆக்கிரமிப்பு . அதனை தொடர்ந்து பஞ்சம் பிழைக்க வந்த ஐரோப்பிய கிறித்தவ வெள்ளையர்களின் அட்டூழியம் என்று கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பாரத தேவி அந்நியரால் சொந்த மண்ணில் சிறைபட்டாள். கொள்ளையிட வந்தவர்கள் இங்கு ஆட்சி அதிகாரத்தை நிறுவ அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் வஞ்சகமும் கை கொடுத்தது. இந்துஸ்தானத்தின் துரதிருஷ்டமான ஒற்றுமையின்மை – சுயநல அரசியல் – குறுகிய மனப்பான்மை எல்லாம் கொள்ளையர்கள் தங்களின் ஆட்சியை நிலை நிறுத்த உதவியது.

காந்தாரம் முதல் சாவகம் வரை சிங்கபுரம் முதல் மங்கோலியம் வரை வியாபித்திருந்த பாரதம் அந்நிய ஆட்சியில் எண்ணற்ற துண்டுகளானது.

கலை இலக்கிய கலாச்சார பொக்கிஷம் முதல் ஆவணங்கள் வரலாற்று தடயங்கள் எல்லாம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அவர்கள் கண்களை உறுத்திய கோஹினூர் வைரம் முதல் மயிலாசனம் வரை அவர்கள் சொந்த நாட்டிற்கு கடத்தப்பட்டது. கலாச்சார அழிப்பு மற்றும் திட்டமிட்ட பூகோள ஆக்கிரமிப்பால் பிரளயத்தில் கூட மங்காத காசி சிதைந்தது. ஏழு முக்தி தலம் முதல் புண்ணிய ஷேத்திரம் யாவும் சிதைந்து அடையாளம் மாறியது.

இந்திர பிரஸ்தம் டில்லியாக புண்ணிய பிரயாகை அலகாபாத் ஆக பாக்யா நகரம் ஹைதராபாத் ஆக இசுலாமிய மதவெறியில் உருமாறியது. மும்பா தேவி நகரம் பாம்பே என்று காளிகட்டம் கல்கத்தா என்று காஷ்யபரின் தபோவனம் மாற்று மத பூமியாக சென்னப்ப நாயக்கர் பட்டினம் மதராஸ் என்று கிறித்தவ வெள்ளையர்களின் கையில் சிக்கி அலங்கோலமானது.

காந்தார தேசம் ஆப்கானிஸ்தான் என்று மியான்மார் பர்மா என்று திபெத் சுதந்திர பூமியாக ஏழ் தங்க தீவு இலங்கை என்று வலுக்கட்டாயமாக பிரிக்கப்படது. சாவகம் புட்பகம் அந்நியமானது. மலேயம் சிங்கபுரம் அண்டைநாடானது இராமன் பிறந்த புண்ணிய பூமி தன் பொலிவிழந்தது. சீதையின் ஜன்ம பூமியான விதேகம் நேபாளமாகி தனித்து நின்றது. இசுலாமிய கொள்ளையர்கள் கொடூரம் போதாதென்று கிறித்தவ வெள்ளையர்களின் அட்டூழியம் தொடர்ந்து இருவரும் கூட்டு சேர்ந்து பொது எதிரியாக இந்துஸ்தானத்தை அங்குலம் அங்குலமாக சூறையாடினார்கள்.

பாரத தேவியின் தன்மான வேள்வியும் இம் மண்ணின் ஆன்மீக சக்தியும் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தர தயாராக இருந்த புத்திரர்கள் வடிவில் இசுலாமிய கிறித்தவ கொள்ளையர்களை எதிர்த்து நின்றது. பல நூற்றாண்டுகளாக அடக்கி அழித்த போதும் அக்ஷய பாத்திரம் போல வளர்ந்த தேசிய எழுச்சியை எதிர் கொள்ள முடியாத கொள்ளையர்கள் வேறு வழியின்றி தங்கள் உயிரை காத்துக் கொள்ள இங்கிருந்து வெளியேற முடிவெடுத்தார்கள். வேறு வழியின்றி வெளியே போனாலும் எக் காலத்திலும் இந்த மண்ணும் மக்களும் மீண்டு எழாமல் இருக்க வேண்டும் என்ற கெடுமதியோடு இங்கு இருக்கும் சிக்கலை எல்லாம் இடியாப்ப சிக்கலாய் மாற்றி தங்களின் முகவர்களாக இருக்க தயாராக இருந்த அடிவருடிகள் கையில் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து போனார்கள்.

போகும் நேரத்தில் கூட எஞ்சியிருக்கும் இந்துஸ்தானத்தை மதத்தின் பெயரால் துண்டாடி காலம் காலமாக ஆக்கிரமித்து வாழ்ந்த வர்களுக்கு தனிநாடு வழங்கி ஆக்கிரமிப்பில் சிதைந்த இந்துஸ்தானிகளை பொதுவான தேசமாக வஞ்சித்தார்கள். கண்ணீரிலும் உதிரத்திலும் தேசம் பதறி நிற்க, பல இலட்சம் மண்ணின் மைந்தர்கள் இந்துக்கள் – சீக்கியர்கள் என்ற காரணத்தால் இசுலாமிய பயங்கரவாதத்தால் கொடூரமாக கொன்று குவிக்க ஓடிய இரத்த ஆற்றின் மீது கிழக்கு – மேற்கு பாகிஸ்தான் உருவானது. எஞ்சிய இந்துஸ்தானம் எல்லோருக்குமான சத்திரமாய் கையறு நிலையில் பரிதவித்தது.

கொள்ளையிட வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் கூறு போட்ட போதிலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ யுத்தங்களையும் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்திய போதிலும் யாவும் கடந்து வந்த பாரதம் அரை நூற்றாண்டு போராட்டம் கடந்து முதலில் தனது மண்ணின் மைந்தர்கள் அரியணை அமர்த்தியது. அவர்கள் சாதுர்யம் – துணிவு கொண்டு இன்று தனது வரலாற்று இழப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாக மீட்டெடுக்கதொடங்கியது. இந்த தேசத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் எல்லாம் இன்று அதன் பலனை அறுவடை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

அகிலம் ஆளும் மஹாசக்தியான பாரத தேவி பொங்கி எழுந்திருந்தால் ஒரு கணத்தில் தன் மாண்பை மீட்டெடுக்க முடிந்திருக்கும். ஆனால் எந்த புத்திரர்களின் ஒற்றுமையின்மை சுயநலம் தன்னை வீழ செய்ததோ ? அதே புத்திரர்களின் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் கொண்டு தான் எழ வேண்டும் என்று காத்திருந்து மீண்டெழுகிறாள். பொறுமையின் சிகரமான அந்த பூதேவி தன்னை சிறை படுத்தி தன் புத்திரர்களின் தன்மானம் – உயிர்- செல்வம் என்று அத்தனையும் காவு வாங்கிய அந்நியர்களை தனது புத்திரர்களின் வீரம் – தீரம் – துணிவு கொண்டு வெற்றி கொண்டே தான் மீள வேண்டும் என்று காத்திருந்தாள்.

கால தேவனும் கை வணங்கும் அந்த தர்ம பத்தினி யின் காத்திருப்பு வீண் போகவில்லை. தன் புத்திரர்களின் பேரெழுச்சியாலே அவள் படிப்படியாக மீண்டு எழுகிறாள். தனது இழப்புகளை எல்லாம் மீட்கிறாள். தனது ஆன்மீக பண்பாடு கலாச்சார பொக்கிஷங்களை எல்லாம் மறு கட்டமைப்பு செய்கிறாள். திட்டமிட்டு சிதைக்க பட்ட அவளின் சிரசை வென்றெடுத்தவள். தன் புதல்வர்கள் வெற்றி கொண்டு சூட்டப் போகும் மணிமகுடத்திற்காக காத்திருக்கிறாள். தங்களின் உயிரினும் மேலான தேசியம் – தெய்வீகம் போற்றும் அவளின் புதல்வர்கள் தங்களை அர்ப்பணம் செய்தேனும் தங்கள் பாரத தேவியின் மாண்பை மீட்டெடுக்க அவளின் ஆசியோடு களம் காண்கிறார்கள். அவளின் ஆசியோடு அவர்கள் வெற்றி வாகை சூடி பாரத தேவியின் மணிமகுடமான அகண்ட பாரதம் எனும் ஆயிரம் ஆண்டுகள் தர்ம வேள்வி வென்று மீண்டெழும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பாரத் மாதா கீ ஜெய்


Share it if you like it