சீனாவிற்கு முட்டு கொடுத்த அருணன் எங்கே?

சீனாவிற்கு முட்டு கொடுத்த அருணன் எங்கே?

Share it if you like it

சீனாவை மேற்கோள் காட்டி இந்தியாவை மட்டம் தட்டி பேசி வரும் அருணேன் எங்கே? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒட்டு மொத்த உலக நாடுகளையும், கொரோனா எனும் பெருந்தொற்றில் சிக்க வைத்த நாடு சீனா. இதன்காரணமாக, லட்சகணக்கான மக்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். பல்வேறு நாடுகள் தங்களது பொருளாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. எனினும், இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி இல்லை என்பதால் அக்கொடிய நோய் தனது கோர முகத்தை இங்கு காட்ட முடியவில்லை. மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த தீவிர முயற்சியின் பலனாக இந்தியாவில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 250 கோடி தடுப்பூசிகளை தமது குடிமக்களுக்கு இந்திய அரசு செலுத்தியுள்ளது.

இந்த, வரலாற்று சாதனையை புரிந்த மோடி அரசை உலக சுகாதார மையம் வெகுவாக பாராட்டி இருந்தன. எனினும், இந்த சாதனையை தி.மு.க., காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டாடவில்லை. அதற்கு மாறாக, மட்டம் தட்டும் நோக்கிலேயே தங்களது முழு கவனத்தையும் செலுத்தினர். அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் பா.ஜ.க. அரசின் சாதனைக்கு பாராட்டு தெரிவிக்காமல் சீனாவிற்கு முட்டு கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வந்தார். குறிப்பாக, கொரோனாவை எப்படி? கட்டுப்படுத்துவது என்று சீனாவை பார்த்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், கொரோனாவை பரப்பிய சீனாவே இன்று அந்நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு தொடர்ந்து விதித்து வருகிறது. ஏற்கனவே, பொருளாதாரத்தையும் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வரும் அந்நாட்டு மக்கள் கொடூங்கோல் சீன கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கியுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எதற்கெடுத்தாலும், சீனாவை மேற்கோள் காட்டி இந்தியாவை மட்டம் தட்டும் நோக்கில் கருத்து தெரிவித்து வரும் அருணன் இப்போது வாய் திறக்காமல் எங்கே? பதுங்கி கொண்டு இருக்கிறார் என்று பலர் வினவி வருகின்றனர்.


Share it if you like it