பா.ஜ.க இளம் தலைவரிடம் ’நோஸ் கட்’ வாங்கிய தயாநிதி மாறன்..!

பா.ஜ.க இளம் தலைவரிடம் ’நோஸ் கட்’ வாங்கிய தயாநிதி மாறன்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி அயோத்தி பூமி பூஜையில் கலந்து கொள்ளும் முன்பு பொழுது அசாதுதீன் ஓவைசி இவ்வாறு கூறி இருந்தார்…

மதச்சார்பற்ற நாட்டில் பாரதப் பிரதமராக உள்ள மோடி அயோத்தி பூமி பூஜையில் கலந்து கொள்ள கூடாது. அரசியலமைப்பின் அடிப்படையில் பதவி ஏற்றுக்கொண்டவர். மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். 400 ஆண்டுகளுக்கும் மேலாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்துள்ளது. அதை நாங்கள் மறக்க மாட்டோம். அது 1992 ஆம் ஆண்டு சில கும்பலால் இடிக்கப்பட்டது என்று தனது குறிப்பிட்டுள்ளார்.

அசாதுதீன் கருத்திற்கு பா.ஜ.க-வின் இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யா இவ்வாறு பதிலடி கொடுத்து இருந்தார்..

ஜனாதிபதி, மாநில முதல்வர், இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களே அப்பொழுது எங்கே? போனது உங்களது மதச்சார்பின்மை. கோவிலை இடித்து விட்டு தான் ஆலயம் கட்டப்பட்டது. அந்த தவறு இப்பொழுது தலைகீழாகிவிட்டது. தயவு செய்து எங்களுக்கு அரசியலமைப்பு பாடம் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார்…

 

தயாநிதி மாறன் எம்.பி நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக தனது கருத்தை இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தார்.

அமெரிக்காவை பின்பற்றும் பிரதமர் மோடி அமெரிக்க தலைவர்களை போல ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

தேஜஸ்வி சூர்யா:

தயாநிதி மாறன் அவர்கள் தடுப்பூசியின் மீதான நம்பகத்தன்மையை பற்றி கிண்டலாக கேள்வி கேட்டார். ஏன் பிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கேட்டார்.

இதுவே பழைய இந்தியாவாக இருந்தால் தயாநிதி மாறன் அவரின் தாத்தா, பாட்டி, குடும்ப உறுப்பினர்களான ஸ்டாலின், உதயநிதி, ஆகியோர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும்..

ஆனால் இது புதிய இந்தியா மருத்துவர்கள், தூய்மைபணியாளர்களுக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும். நாட்டிற்காக போராடுபவர்களுக்கும், மக்களின் பாதுகாவலர்களுக்குமே இங்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தக்க பதிலடி கொடுத்து இருந்தார்…


Share it if you like it