குஜராத் தேர்தலில் இமாலய வெற்றி: மோடியை புகழும் சர்வதேச ஊடகங்கள்!

குஜராத் தேர்தலில் இமாலய வெற்றி: மோடியை புகழும் சர்வதேச ஊடகங்கள்!

Share it if you like it

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ.க. 156 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றியை பெற்றிருக்கிறது. பா.ஜ.க.வின் இந்த பிரம்மாண்ட வெற்றிதான் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. சர்வதேச ஊடகங்கள் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டி வருகின்றன.

குஜராத் மாநிலத்தில் கடந்த 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. கடந்த 8-ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ.க. 156 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றியை பதிவு செய்தது. குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை, கடந்த 1995-ம் ஆம்டு முதல் தொடர்ந்து 6 முறை ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., இதுபோன்றதொரு அசுர வெற்றியை பெற்றதில்லை. அதிகபட்சமாக 2002-ம் ஆண்டு தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி குஜராத் முதல்வர் தேர்தலில் போட்டியிட்டபோது 127 இடங்களில் வெற்றிபெற்றது. இதுதான் மிகப்பெரிய வெற்றியாக இருந்துவந்தது.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெறும் 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை 156 இடங்களில் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. அதேபோல, 1995-ம் ஆண்டுக்குப் பிறகு, குஜராத்தில் பா.ஜ.க. இதுவரை தோல்வியை சந்தித்ததே இல்லை. அதோடு, இதுவரை 6 முறை தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க., தற்போது 7-வது முறையாக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் இந்த இமாலய வெற்றியும், தொடர் வெற்றியும் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கிறது.

காரணம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், போலி போராளிகளும், போலி சமூக ஆர்வலர்களும், போலி அரசியல் பார்வையாளர்களும், உ.பிஸ் ஊடகங்களும், குஜராத்தில் இந்த முறை பா.ஜ.க. மண்ணை கவ்வும் என்று கூறிவந்தனர். மேலும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அகில இந்திய காங்கிரஸ் மூத்த மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஓவைசி மற்றும் பல கட்சிகளின் தலைவர்களும் பா.ஜ.க.வுக்கு எதிராக கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டனர். ஆனால், எல்லாவற்றையும் ஃபூ என ஊதித்தள்ளி விட்டு அசுர பலத்திலான வெற்றியை பதிவு செய்திருக்கிறது பா.ஜ.க.

இதில் ஹைலைட் என்னவென்றால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அக்கட்சியின் வி.வி.ஐ.பி. வேட்பாளர்கள் பலர் டெபாசிட்டை இழந்தனர். அதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களும், ஓவைசி கட்சியின் வேட்பாளர்கள் பலரும் டெபாசிட் இழந்து மண்ணை கவ்வினர். பா.ஜ.க.வின் இந்த குஜராத் வெற்றிதான் இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. பிரிட்டன் பத்திரிகையான ‘தி கார்டியன்’ பா.ஜ.க.வின் குஜராத் வெற்றியை எதிர்வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதேபோல, ஜப்பானின் ‘நிக்கி ஏசியா’ 1995-ம் ஆண்டு முதல் குஜராத்தில் பா.ஜ.க. தோல்வியே சந்திக்காமல், தொடர் வெற்றிகளை பெற்று வருவது பற்றி பெருமையாக செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ‘தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்’ நாளிதழ் மற்றும் இண்டிபெண்டன்ட், ஏ.பி.சி. நியூஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பா.ஜ.க. தொண்டர்களின் வெற்றி கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை பகிர்ந்துள்ளன. தவிர, அல்ஜசீரா, ஏ.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும் பாரத பிரதமர் மோடியின் செல்வாக்கையும், குஜராத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றியையும், அக்கட்சித் தொண்டர்கள் ஆரவாரமகாகக் கொண்டாடும் புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கின்றன.


Share it if you like it