மொதல்ல தடா பெரியசாமிக்கிட்ட மோதிட்டு வாங்க… திருமாவுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதிலடி!

மொதல்ல தடா பெரியசாமிக்கிட்ட மோதிட்டு வாங்க… திருமாவுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதிலடி!

Share it if you like it

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க. ஒரு தேசியக் கட்சி. அக்கட்சியைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்தின் தலைவர் என்பது கிளைத் தலைவரைப் போன்றவர். இது தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்குமான யுத்தம் கிடையாது. பா.ஜ.க.வுக்கும் வி.சி.க.வுக்குமான யுத்தம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பா.ஜ.க.வுக்கும் வி.சி.க.வுக்குமான யுத்தம் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். அப்படியல்ல, இது வி.சி.க.வுக்கும் தடா பெரியசாமிக்கும் நடக்கும் யுத்தம். முடிந்தால் வி.சி.க.வினர் தடா பெரியசாமியிடம் மோதிவிட்டு, அதன் பிறகு எங்கள் கிளைத் தலைவரிடம் மோதுங்கள்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும், திருமாவளவனுக்குத் துணை முதல்வராக வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. அதனால்தான் கூட்டணியை விட்டு போய்விடுவேன் என்று ஸ்டாலினை மிரட்டிக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். மேலும், திருமாவளவனுக்கு அண்ணாமலை என்னவெல்லாம் பதிலடி கொடுத்தார் என்பதை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள்…


Share it if you like it