சனாதன ஒழிப்பு மாநாடு பின்புலம் பற்றி சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சனாதன ஒழிப்பு மாநாடு பின்புலம் பற்றி சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Share it if you like it

தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. மாநில அரசின் உரிய அனுமதி பாதுகாப்போடு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்தின் இளைஞர் நலன் விளையாட்டு துறை மேம்பாட்டு அமைச்சர் மற்றும் சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இவர் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருப்பவர். மற்றொரு சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவரும் திமுகவின் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் வடசென்னை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருப்பவருமான சேகர் பாபு கலந்து கொண்டார்.

இதில் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் எதிர்க்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒழிக்கப்பட வேண்டியது தான் .அந்த வகையில் இந்த தலைப்பு சரியானது .இதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று பேசியவர் நாடு முழுவதும் பலத்தை எதிர்ப்பும் கண்டனமும் வந்த பிறகும் என் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். எப்படி கொரோனா டெங்கு மலேரியா எல்லாம் அழிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒன்றிணைந்து போராடினோமோ ? அதே போல சனாதனத்தை ஒழிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பேசினார். இதற்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் முதல் மூத்த திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள் திக அமைப்பினர் அவர்களின் துணை அமைப்பினர் விசிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் என்று பல்வேறு மட்டத்தில் அவருக்கு ஆதரவும் ஆதரவான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களும் தொடர்கிறது.

தமிழகத்தில் இந்து சனாதன ஒழிப்பு மாநாடு நடந்ததும் அதில் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் கலந்து கொண்டதும் இதற்கு முதல்வர் உள்ளிட்ட அவரது கட்சிக்காரர்கள் கூட்டணி கட்சிக்காரர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது நாடு முழுவதும் பலத்த கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் இது தொடர்பாக வழக்கு பதிவு நடந்து வருகிறது. திமுக அங்கம் வகிக்கும் ஐஎன்டிஐஏ கூட்டணியில் காங்கிரஸ் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து . நாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்ற ஒதுங்கிக் கொண்டது . சிவசேனா திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் திமுகவின் இந்த நிலைப்பாட்டையும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த சனாதன ஒழிப்பு மாநாடு அதை நடத்தியவர்கள் அவர்களின் பின்புலம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்தின் வழியில் ஜனநாயக ஆட்சி நடைபெறும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில் ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒரு மாநில அரசு. ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலை அவர்களின் மத நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகளை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று பகிரங்கமாக மத துவேஷ மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது. உள் அரங்கில் நடைபெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மற்றும் காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தை ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் இரண்டு பேர் கலந்து கொண்டு மேடையிலேயே சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார்கள். இதை அந்த கட்சியின் தலைவரும் மாநில முதல்வரும் தொடங்கி மூத்த கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் வரை அனைவரும் ஒருமித்த குரலில் ஆதரிக்கிறார்கள். அவர்களின் கருத்தில் உடன்பட்டு தொடர்ந்து ஆதரவு கருத்துக்களையும் பேசி வருகிறார்கள்.

கூட்டணி கட்சியினர் ஒரு சிலர் அதை ஆதரிப்பதும் ஒரு சிலர் அதைப்பற்றி பேச மறுப்பதுமாக தமிழக அளவில் நிலைபாடுகள் மாறுகிறது. ஆனால் தேசிய அளவில் பெரும்பாலான கட்சிகள் வெளிப்படையாக அவர்களின் பேச்சை கண்டித்தும் விமர்சித்தும் வருகிறது. இவ்வளவு நடந்த பிறகும் இதுவரையில் இந்த மாநாட்டில் நடத்தியவர்கள் கலந்து கொண்டவர்கள் மீது தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தொடர்ந்து அதை ஆதரிக்கும் அவர்களை பாதுகாக்கும் மனநிலையை தான் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது.

இந்த தொடர்ச்சியான சம்பவங்கள் அதன் வெளிப்பாடுகள் அனைத்தையும் சீர்தூக்கி பார்க்கும் போது தமிழகத்தை மையமாகக் கொண்டு சனாதன தர்மம் என்னும் பெரும்பான்மை மக்களின் வாழ்வியல் தர்மம் அதன் வழியில் வாழும் மக்கள் அவர்களின் நம்பிக்கைகள் என்று அனைத்திற்கும் எதிராக ஒரு பெரும் கூட்டம் மத துவேஷ சதியில் ஈடுபடுவது கண்கூடாக தெரிகிறது . இந்த சதியின் ஒரு கருத்தியல் வெளிப்பாடுதான் இது போன்ற மேடைகள் வெளிப்படையாக சனாதன ஒழிப்பை பற்றி பேசுவதும் அதை ஆட்சியாளர்கள் முழுவதுமாக ஆதரித்து முன் நின்று நடத்திக் கொடுப்பதும் கொடுக்கும் எச்சரிக்கை.

ஆளும் கட்சி அதன் ஆதரவு பெற்ற அமைப்பு சனாதன ஒழிப்பு என்ற மாநாட்டை நடத்தி இருக்கிறது .அதே சனாதன தர்மத்தின் வழியில் வாழும் மக்கள் அவர்கள் ஆதரவு பெற்ற கட்சிகள் இதர அரசியல் கட்சிகள் அதை ஆதரித்தும் எதிர்த்தும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த சனாதன தர்மத்தின் வழியில் வாழாத அந்நிய மதங்களின் வழியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாற்று மதம் சார்ந்த அரசியல்வாதிகளும் தனி நபர்களும் மாற்று மதம் சார்ந்த அமைப்பில் இருப்பவர்களும் இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு ஆதரவாகவும் மாநாட்டை முன் நின்று நடத்தியவர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் கருத்தில் உடன்படுவதாகவும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது தமிழகத்தில் தொடர்கிறது. அப்படி எனில் இங்கு மாற்று மதம் சார்ந்தவர்கள் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் தர்மம் நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று விரும்புவதும் அதை செய்ய துணிபவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும் கண்கூடாக தெரிகிறது.

இவர்கள் மீது எல்லாம் உரிய கண்காணிப்புகளை நடத்தி அவர்களை கண்டித்து சட்டத்தின் வழியில் அனைவரையும் பொதுவாக வழி நடத்திப் போக வேண்டிய ஒரு மாநிலத்தின் முதல்வர் மாநில முதல்வராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட போது அவர் சட்டத்தின் வழியில் எடுத்த உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு ஒரு மதத்திற்கும் அதன் வழியில் வாழும் மக்களுக்கும் எதிராக துவேசம் பேசுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களை ஆதரிப்பதும் அதன் ஆதரவு கருத்துக்களை பொதுவெளியில் பகிர்கிறார் .இன்று வரை சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பாதுகாக்க முயல்வதும் தமிழகத்தின் ஆளும் கட்சியும் அரசு எந்திரமும் முழுமையாக சனாதன ஒழிப்பு என்ற கருத்தியலில் உடன்பட்டு செயல்படுவதை அப்பட்டமாக தெரிகிறது.

இது சட்ட விரோதம் இதை செய்யும் பட்சத்தில் கட்சி ஆட்சி இரண்டிற்கும் குந்தகம் வரக்கூடும் என்று தெரிந்தும் இதை செய்வார்கள் ஆனால் இதன் உண்மையான பின்னணி என்ன? தமிழகத்தில் மையமாக வைத்து மத ரீதியான பிளவுகள் கலவரங்கள் பயங்கரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு ஏதேனும் பெரிய சதி நடக்கிறதா ? இந்த தேசத்தின் அமைதியை வளர்ச்சியை சீர்குலைக்க வேண்டும் என்ற சதியோடு உலவும் அந்நிய அமைப்புகள் ஏதேனும் இதன் பின்னணியில் இருக்கிறதா ? என்ற முழுமையான விவரங்கள் கண்டறியப்பட வேண்டும் . இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் வழியில் தண்டிக்கப்பட வேண்டும் .இனி எந்த காலத்திலும் இது போன்ற எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்கள் கருத்துக்கள் தலைதூக்கா வண்ணம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.

நிச்சயம் இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டை அதன் பின்னணி அதன் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி தீவிரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அது நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அல்லது பிரதமர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டால் மட்டுமே உரிய பலனை கொடுக்கும் .அந்த வகையில் சிபிஐ என்ஐஏ உள்ளிட்ட வலுவான ஒரு தேசிய பாதுகாப்பு அமைப்பு களத்தில் இறங்கி இந்த சனாதன ஒழிப்பு மாநாடு அதன் பின்னணி பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும். என்பதே இங்குள்ள பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.


Share it if you like it