கூலி காசுக்கு பதிலாக கள்ளச்சாராயம்: தி.மு.க. பிரமுகரின் தகிடுதத்தம் அம்பலம்!

கூலி காசுக்கு பதிலாக கள்ளச்சாராயம்: தி.மு.க. பிரமுகரின் தகிடுதத்தம் அம்பலம்!

Share it if you like it

செங்கல்பட்டு அருகே கள்ளச்சாரயம் குடித்து 5 உயிரிழந்த விவகாரத்தில், புதிய தகவல் அம்பலமாகி இருக்கிறது. கூலி வேலை செய்ததற்கு பணத்துக்கு பதிலாக தி.மு.க. பிரமுகர் கள்ளச்சாராயத்தை குடுத்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் சட்ட விரோத செயல்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து என ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, இன்னொருபுறம், போலி மது, கள்ளச் சாராயம் என களைகட்டிக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தி.மு.க. கவுன்சிலரின் கணவர் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு தி.மு.க. பிரமுகர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று, 5 உயிர்களை காவி வாங்கி இருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா சித்தாமூர் அருகேயுள்ள பெருங்கரணை கிராமத்தைச் சேர்ந்த வசந்தா, செல்வம், மாரியப்பன், பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன், சந்திரா ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். இது தொடர்பாக தி.மு.க. சித்தாமூர் ஒன்றிய கவுன்சிலர் நாகப்பனின் சகோதரர் அமாவாசை என்பர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில்தான், அமாவாசை என்பவர் கூலி வேலை செய்த காசுக்கு பதிலாக கள்ளச்சாராயத்தை கொடுத்த சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.

இதுகுறித்து தாய், சகோதரி, மாமா ஆகியோரை பறிகொடுத்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கூறுகையில், “அமாவாசை தோட்டத்துக்கு எனது மாமா களை வெட்டச் சென்றார். வேலை முடித்துவிட்டு கூலிக் காசு கேட்டதற்கு, காசு இல்லை சாராயம்தான் இருக்கிறது என்று அமாவாசை கூறியிருக்கிறார். சரி, குடுங்க என்று வாங்கி வந்து எனது மாமா, அக்கா, அம்மா ஆகியோர் சாராயத்தை குடித்திருக்கிறார்கள். இதன் பிறகு, முதலில் எனது மாமாவும், பிறகு எனது அம்மாவும், தொடர்ந்து எனது அக்காவும் உயிரிழந்து விட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it