பா.ஜ.க. நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு: சைதை சாதிக்குக்கு கோர்ட் உத்தரவு!

பா.ஜ.க. நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு: சைதை சாதிக்குக்கு கோர்ட் உத்தரவு!

Share it if you like it

பா.ஜ.க. நிர்வாகிகளான நடிகைகள் குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை ஆர்,கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் அண்மையில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைமைக் கழக ஆபாசப் பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜ.க. நிர்வாகிகளான குஷ்பு, கௌதமி, நமிதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். இவரது பேச்சுக்கு பா.ஜ.க. மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சைதை சாதிக்கை கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இப்போராட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி மன்னிப்புக் கோரியிருந்தார். ஆனால், சைதை சாதிக்கோ, கூட்டத்திற்கு தலைமை வகித்த அமைச்சர் மனோதங்கராஜோ மன்னிப்புக் கேட்கவில்லை.

இதையடுத்து, அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குஷ்பு வலியுறுத்தி இருந்தார். எனினும், யாரும் மன்னிப்புக் கேட்கவில்லை. இதைத் தொடர்ந்து, சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயப்போவதில்லை என்று அறிவித்த குஷ்பூ, கடந்த 4-ம் தேதி டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்தில் தலைவர் ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் அளித்தார். அந்த புகாருடன் சைதை சாதிக் பேசிய வீடியோ ஆதாரத்தையும் இணைத்திருந்தார். மேலும், அமைச்சர் மனோதங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்புகாரில் கோரியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்? என்னிடம் யாரும் மன்னிப்புக் கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கைதான் தேவை” என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, சைதை சாதிக்குக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். எனவே, இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார் சைதை சாதிக். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் பற்றி இனி அவதூறாகப் பேச மாட்டேன் என்று நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோரி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை சைதை சாதிக்கை கைது செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

தனது வறட்டுப் பிடிவாதத்தால் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று திமிராக இருந்த சைதை சாதிக்குக்கு கோர்ட் சரியான குட்டு வைத்திருக்கிறது.


Share it if you like it