மதம் மாற்றச் சொன்னாரா இயேசு?

மதம் மாற்றச் சொன்னாரா இயேசு?

Share it if you like it

ஓர் இந்திய கிறிஸ்தவரின் இதயத்திலிருந்து வெளிச்சத்திற்கு வந்த கிறிஸ்தவ மதமாற்றம்!

ஆதியாகமம் 18:19

கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றான்..!

ஆனால், பைபிளில் சொன்னபடி ஒருவருக்கும் தீங்கு செய்யாமல், பொய் சொல்லாமல், பாவம் செய்யாமல், நேர்மையாகவும் நீதிமான்களாகவும் நடக்க பைபிள் வசனத்தில் கூறப்பட்டதே தவிர, கட்டாயமாக மதமாற்றங்கள் செய்யச் சொல்லி பைபிளில் எந்த அதிகாரத்திலும் சொல்லப்படவில்லை. காலங்காலமாக கிறிஸ்தவனாக இருக்கும் கிறிஸ்தவர்கள் பைபிள் வார்த்தைப்படி நடக்கத்தான் சொல்கிறார்கள். ஆனால், என்னவோ புதிதாக கிறிஸ்தவ ஆலயம் தொடங்கும் சில பாதிரியார்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் சில ஆசிரியர்கள், கிறிஸ்தவ பள்ளிகளில் அனைத்து மதத்தினரும் சேர்ந்து பயிலும் இந்த வேலையில், ஒரு மதத்தை குறித்து மட்டும் மனமாற்றம், மதமாற்றம், கட்டாய பைபிள் கல்வி, கட்டாய போதனை ஆகியவற்றை திணிப்பதால் மாணவர்கள் மனமுடைந்து மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிரை மாய்க்கும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள்.

மதமாற்றம் குறித்து இந்திய குடிமகனும், இந்திய அரசியலமைப்பும் சொல்வது என்னவென்றால்,  தனிப்பட்ட ஒருவர், எந்த மதத்தை விரும்பினாலும், அவர் மனம் விரும்பி, தனக்குப் பிடித்த மதத்தை பின்பற்றலாம். அந்த உரிமையை நமது அரசியல் அமைப்பு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கியுள்ளது. ஆனால், அதனை முழுமையாக கடைப்பிடிக்காமல், ஆசைவார்த்தை கூறியோ அல்லது கட்டாயப்படுத்தியோ மதம் மாற்றுவது என்பது மன்னிக்க முடியாத செயல். மாணவ மாணவிகளின் மேற்படிப்புக்கு நிதியுதவி அளிக்கப்படுவதன் மூலமாக பலர் மதம் மாற்றம் செய்யப்படுகிறார்கள் எனவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவி செய்வதாக ஆசைவார்த்தை கூறியும், ஒருவர் மேன்மை நிலையை அடைய கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால்தான் சாத்தியம் என்று மூளைச்சலவை செய்யப்பட்டும், பைபிள் மட்டுமே புனிதமானது, கீதை மோசமானது என்று பேசியும் மதம் மாற்றுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இரணியல் அருகே இருக்கும் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த தையல் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவிகளிடம் ‘கிறிஸ்துவ மதம் சார்ந்த பிரார்த்தனைகளை சொல்லி, பிரார்த்தனை செய்ய கட்டாயப் படுத்தியதாகவும், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் பகவத்கீதையை மோசமானது’ என்றும் ஆசிரியை கூறியதாக அந்தப் பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் குற்றம்சாட்டி இருந்தார். இதனையடுத்து, அந்த ஆசிரியை அந்தப் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் உண்மை. இளைய சமுதாயத்தினர் இடையை  பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மத்தியில் படிக்கும் பருவத்தில் இதுபோன்ற மத மாற்ற செயல்களில் சிலர் ஈடுபடுவது குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சு விதைப்பது போல தேவையில்லாத சமூக பிரச்னைகள் பல அரங்கேறி வருகின்றன.

அதேபோல், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்கிற ஏழை விவசாயியின் 17 வயது மகள் லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் தொடர்ந்து கிறிஸ்தவ மதமாற்ற வற்புறுத்தல், அழுத்தம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷமருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி ஜனவரி மாதம் உயிரிழந்தார். பள்ளி ஆசிரியைகள் மற்றும் விடுதிக் காப்பாளர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிடுமாறு தொடர்ந்து உளவியல் ரீதியாக சித்திரவதை செய்ததும், மதம் மாற மறுத்ததால் கழிவறையை சுத்தம் செய்தல் உட்பட தண்டனை அளித்ததும்தான் தன்னை இந்த முடிவை நோக்கித் தள்ளியது என்று மரணத்திற்கு முன் அளித்த வீடியோ வாக்குமூலத்தில் தெளிவாக லாவண்யா குறிப்பிட்டுள்ளார். பள்ளிக்கூடம் விதிக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டியது மாணவர் கடமை. பல மதத்தவர்களும் படிக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தின் அடையாளங்களை முன்னிலைப்படுத்துவது தவறு.

வடமாவட்டங்களில் வன்னியர்களிடையே கிறிஸ்தவ மதமாற்றங்கள்:

புனிதமான அக்னிச்சட்டியின் மீது மானுட விரோத அன்னியமத சின்னமான சிலுவையை வரைந்து மத மாற்ற ரீதியாக முயற்சி, வன்னியர்கள் வன்னிய கிறிஸ்தவர், கிறிஸ்தவ வன்னியர் என பெயர்களை மாற்றி மத மாற்ற முயற்சி. இருப்பினும் நீலகிரி படுகர் சமுதாயத்தினர் கூட, சில வருடங்களுக்கு முன் அங்கு கிறிஸ்தவ மதமாற்றம் உள்நுழைந்தபோது கிறிஸ்தவ படுகர் என்ற பெயர் மதமாற்றிகளால் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து கலெக்டர் அலுவலகம் முன் மாபெரும் போராட்டம் நடத்தி அதை நீக்கவைத்தார்கள். ஏமாற்றி மதமாற்றப்பட்டவர்களும் பின்பு தாய்மதம் திரும்பினார்கள்.

திருப்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி, மதமாற்றம் செய்ய ஆசிரியை ஒருவர் பெரும்பான்மையான ஹிந்து மக்களால் வழிபடப்படும் சிவபெருமானை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், மாணவ, மாணவிகள் தங்களது நெற்றியில் விபூதி வைப்பதையும், கழுத்தில் ருத்ராட்சம் அணிவதையும் கண்டு ஆவேசமாக கத்தினார். ஹிந்துமதத்தில் இருந்த தீண்டாமையும், சாதிக் கொடுமையும்தான் மதம் மாற முக்கிய காரணமாக இருந்தது என்றும், ஹிந்து மதத்தில்தான் கட்டாய மதமாற்றம் முதன் முதலில் நடந்தது என்றும் சொல்கிறார்கள். இவர்கள் யாரென்று பார்த்தால் நேற்றுவரை ஹிந்து என்றொரு மதமே இல்லை, வெள்ளைக்காரன்தான் ஹிந்து என்று பெயர் வைத்தான். தமிழர்களுக்கு மதமே இல்லைனு சொல்லி திரிந்தவர்களாவர்.

மக்கள் சாதிக் கொடுமைகளாலும், வறுமையினாலும் மதம் மாறினார்கள் என்பதை மறுக்கவே முடியாது. அதேசமயம், இந்த சாதிக் கொடுமைகளுக்கும், வறுமைகளுக்கும் அதிகாரவர்க்கத்தின் ஆளுமைகளே காரணமாக இருக்க முடியுமேயன்றி, ஹிந்து மதமோ, ஹிந்து மதத்தின் தர்ம நூல்களோ இவற்றை முன்மொழியவே இல்லை. சமீபத்தில்

திருவண்ணாமலை அருகே இருக்கும் மருத்துவாம்பாடி என்ற கிராமத்தில், ஆர்.சி. என்று அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது. அந்த நிர்வாகத்தின் சார்பில், புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் பாதிரியார் ஒருவர் அங்கு குடியிருக்கும் ஒரு பிரிவு மக்களை மதம் மாற்ற வலியுறுத்தினார். ஆனால், அந்த ஊர் மக்கள் மறுத்து விட்டனர். இதனால் கோபமடைந்த சர்ச் நிர்வாகத்தினர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது வழியை ஆக்கிரமித்து திடீரென சுற்றுச்சுவர் எழுப்பினர்.

தமிழ்நாட்டில் இதேபோன்று 2006-ல் ஓமலூர் சுகன்யா, சென்னையில் 2009-ல் ரஞ்சிதா, 2011-ல் ரம்யா, 2015-ல் உசிலம்பட்டியில் சிவசக்தி ஆகிய மாணவிகள் தாங்கள் படிக்கும் கிறிஸ்தவ பள்ளிகளில் தரப்பட்ட மதமாற்ற அழுத்தம் மற்றும் உளவியல் சித்ரவதைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நடைமுறையில் உள்ள மதமாற்ற தடைச் சட்டம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எஸ்.சி., எஸ்டி. பிரிவினர் அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதால், மதமாற்ற தடை மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், ம.ஜ.த. ஆகிய எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை பரிசீலித்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கர்நாடக மத சுதந்திர உரிமை சட்ட மசோதா 2021 என்ற பெயரிலான மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டது. அதிகபட்சம் 10 ஆண்டு சிறை.

மதம் மாறி புனிதர் பட்டம் பெற்ற #நீலகண்டன்

1712-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்ற கிராமத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த காயங்குளம் வாசுதேவன் நம்பூதிரிக்கும், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள நாயர் சமுதாயத்தைச் சேர்ந்த தேவகி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த நீலகண்டனுக்கு கிறிஸ்தவம் என்னும் மதம் ஒன்று இருப்பதை டிலன்னாய் என்பவர் அறிமுகப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் வடக்கன் குளத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில், பங்குத் தந்தையாக இருந்த ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி என்பவர் நீலகண்டனுக்கு திருமுழுக்கு செய்து ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதத்துக்கு மாற்றி தேவசகாயம் என்று பெயரை சூட்டினார். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நீலகண்டன், பல ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதாக வரலாற்று உண்மைகள் கூறுகிறது. 1993-ம் ஆண்டு தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் அளிக்க கோட்டாறு மறைமாவட்ட ஆயர் முயற்சியை மேற்கொண்டார். பின்னர், 2004-ம் ஆண்டில் கோட்டாறு மறைமாவட்டம் தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை போன்ற அமைப்புகள் இணைந்து கத்தோலிக்க தலைமை இடத்திற்கு புனிதர் பட்டம் வழங்குமாறு கோரிக்கை வைத்தன. இந்தக் கோரிக்கையை 8 வருடம் கழித்து ஏற்று 2012-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி போப் பெனடிக்ட் வணக்கத்திற்குரியவர் என்ற அந்தஸ்தை தேவசகாயத்திற்கு வழங்கினார்.

எண்ணாகமம் 23:19

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. மனம் மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

இந்தியர்கள் எல்லோரும் இந்துக்களே..!

கட்டுரையாளர்: பிரவின் குமார்,

பா.ஜ.க. சிறுபான்மை அணி

தமிழ்நாடு


Share it if you like it