அனுமனை சீண்டிய ராகுல் காந்தி: அய்யோ போச்சே… கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அலறல்!

அனுமனை சீண்டிய ராகுல் காந்தி: அய்யோ போச்சே… கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அலறல்!

Share it if you like it

பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என கர்நாடக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இது தற்போது அந்த கட்சிக்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்வரும் மே -10- ஆம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் தெரிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு அனுமன் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து, அம்மாநிலம் முழுவதும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் காங்கிரஸ்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதே வேளையில், நாடு முழுவதும் காங்கிரஸ்க்கு கடும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்டாக இருப்பவர் ஜெகன். இவர், கர்நாடக தேர்தலை மையமாக வைத்து கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கார்ட்டூன்தான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it