தி.மு.க.வின் பகுத்தறிவு… புரோகிதர்கள் புடைசூழ நடந்த முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் பிறந்தநாள்!

தி.மு.க.வின் பகுத்தறிவு… புரோகிதர்கள் புடைசூழ நடந்த முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் பிறந்தநாள்!

Share it if you like it

பகுத்தறிவு பேசும் முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளின் பிறந்தநாள் விழா, புரோகிதர்கள் புடைசூழ நடந்திருப்பது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் 90-வது பிறந்தநாள் விழா நேற்று கோபாலபுரம் வீட்டில் வெகு விமரிசையாக நடந்து முடிந்திருக்கிறது. இவ்விழாவில், முதல்வர் ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி, தம்பி தமிழரசு, அக்கா செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது முதல்வர் ஸ்டாலினும், .அழகிரியும் தனியாக சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, கோபாலபுரம் வீட்டிற்கு எதிரில் கிருஷ்ணன் கோயில் ஒன்று இருக்கிறது. தயாளு அம்மாள் இக்கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், தற்போது வயது முதிர்வு காரணமாக, தயாளு அம்மாள் வீட்டிலேயே இருந்து வருகிறார். ஆகவே, அவரது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அவரது வீட்டிற்கே சென்று பிரசாதம் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக, கிருஷ்ணன் கோயில் புரோகிதர்கள், கோபாலபுரம் வீட்டிற்கு அணிவகுத்துச் சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோதான் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. அதாவது, கருணாநிதியாகட்டும், ஸ்டாலினாகட்டும் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள். ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ச்சகர்களால் வைக்கப்பட்ட விபூதி, குங்குமம் ஆகியவற்றை கோயிலிலிருந்து வரும்போது, அழித்து தனது பகுத்தறிவு கொள்கையை வெளிப்படுத்தியவர் ஸ்டாலின். அப்படி இருக்க, தயாளு அம்மாள் பிறந்த நாளுக்கு கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து, புரோகிதர்கள் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்த நிகழ்ச்சி, பகுத்தறிவு கொள்கைக்கு விரோதமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it