சட்டை பட்டனை கழட்டி விட்டு கெத்தாக காவல்துறைக்கு பதில் மரியாதை செய்த அமைச்சரின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், கட்சியின் சீனியர் தலைவர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. குறிப்பாக, தொண்டர்களை ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை என்பதே பல தொண்டர்களின் மனக் குமுறல்களாக உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவரது செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும், தனது போக்கினை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து ஆணவ போக்கோடு செயல்பட்டு வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்தவகையில், அவருக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். பதிலுக்கு, ஒரு பொறுப்பான அமைச்சராக உதயநிதி நடந்து கொண்டு இருக்க வேண்டும். எனினும், அதனையெல்லாம் மறந்து விட்டு சுற்றுலாவுக்கு வந்து செல்வது போல கழுத்தில் கூலிங்க் கிளாஸ், சட்டையின் முன் பட்டனை கழட்டி விட்டு காவலர்களை அவமதிக்கும் நோக்கில் பதில் மரியாதை செலுத்தி இருக்கிறார். இதுதான், அமைச்சர் நடந்து கொள்ளும் விதமா என பலர் கேள்வி? எழுப்பி வருகின்றனர்.
