ஆளப் பாத்தா டம்மி பீஸா இருக்க… பயங்கரமான ஆளா இருக்கியேடா? என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவார் அதனை மெய்ப்பிக்கும் வகையில் தி.மு.க. நிர்வாகியின் செயல் அமைந்து இருக்கிறது.
தி.மு.க.வின் மூத்த தலைவரும், வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராம ஊராட்சி மன்ற தலைவருமாக இருப்பவர் மகாலிங்கம். இவர், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசியல் தகவல் அடிப்படையில் டெல்லியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற வாகனத்தை மறித்து சோதனை நடத்தினர்.
அதில், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வாகன ஓட்டுநரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் மகாலிங்கத்திடம் போதை பொருளை ஒப்படைப்பதற்காக நாகப்பட்டினம் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து, நாகை மாவட்ட காவல் கண்பாணிப்பாளருக்கு தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் மற்றும் அவருடைய மகன் அலெக்ஸை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். இதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
இதனிடையே, தி.மு.க 19-வது வார்டு கவுன்சிலர் சர்ப்ரைஸ் நவாஸ், முன்னாள் தி.மு.க கவுன்சிலர் ஜெய்னுதீன் 360 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.