பூண்டி கலைவானின் ஆதரவாளர்கள் தி.மு.க.விற்கு எதிராக போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பூண்டி கலைவாணன். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் காலத்திலிருந்தே தி.மு.க.வில் பயணிப்பவர். இப்படிப்பட்ட சூழலில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்று சொல்லப்பட்டது. அந்த வகையில், தனக்கு அமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்கும் என பூண்டி கலைவாணன் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், டி.ஆர். பாலுவின் மகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜாவிற்கு அமைச்சரவையில் இடம் கிடைத்து இருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பூண்டி கலைவாணின் ஆதரவாளர்கள் தி.மு.க. அரசை கண்டித்து வெளியிட்டு இருக்கும் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

