விடியல் முதல்வரின் கருத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சரியான பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனது ஆட்சியை இழந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பா.ஜ.க.வை விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு, மத்திய அமைச்சர் முருகன் கொடுத்த பதிலடி இதோ : ”தமிழ் மண்ணான புதுச்சேரியில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. தமிழகத்தில் கூட தி.மு.க. பலமுறை தூக்கி எறியப்பட்டது. எம்.ஜி.ஆர் இருந்தபோது தி.மு.க. வெற்றி பெறுவதே கடினமாக இருந்தது. கருணாநிதி ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆகவே ஒரு தேர்தலை வைத்து மட்டுமே மற்ற விஷயங்களை சொல்ல முடியாது.
தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க. மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. எம்எல்ஏக்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். புதுச்சேரியில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக ஆட்சி நடக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளோம். எனவே, திராவிட மண்ணில் பாஜக வரமுடியாது; பாஜக துடைத்தெரியப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறுவது அவருடைய கற்பனை. தனது திருப்திக்காக இதுபோன்று அவர் சொல்லி வருகின்றார்.
உண்மையில் இன்று பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் 2018-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் எப்படி இருந்தததோ, அதே போன்ற வாக்கு சதவீதம் இப்போதும் உள்ளது என கூறியுள்ளார்.