ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றது குறித்து, பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் குஷ்பு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் வாயிலாக மாற்றிக்கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கின்றன. இதற்கு, செப் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பொதுமக்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என விமர்சனம் செய்திருந்தார். டெல்லி முதல்வரின், இந்த கருத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார் அவரின் பதிவு இதோ :
“ஆணவத்தின் முழு உருவம். அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஒரு தன்மை இருக்க வேண்டும். நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி ஏற்கத்தக்கது அல்ல” என்று கடிந்து கொண்டுள்ளார்.