அப்பாவின் தயவில் வந்தவர் நீங்கள்… இதில் தொழில்துறை மந்திரி வேறு: பங்கம் செய்த அண்ணாமலை!

அப்பாவின் தயவில் வந்தவர் நீங்கள்… இதில் தொழில்துறை மந்திரி வேறு: பங்கம் செய்த அண்ணாமலை!

Share it if you like it

அமுல் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது தொடர்பாக அண்ணாமலை கூறிய கருத்திற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தவறான கருத்தினை பதிவு செய்து அசிங்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அமுல் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழகத்திலுள்ள முக்கியமான 7 மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இதனை, எப்படியாவது தடுக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இந்த சம்பவத்தைதான் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்திருந்தார். அதாவது, ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது இவ்வாறு கூறினார் : “பள்ளியில் மாணவர்கள் லீவு வேண்டுமானால், குறிப்பிட்ட வகுப்பறையின் ஆசிரியருக்குத்தான் லீவு லெட்டர் எழுத வேண்டும். அதைவிடுத்து, பள்ளியின் சேர்மனுக்கு லீவு லெட்டர் எழுதலாமா? அதுபோல, அமுல் நிறுவனம் குஜராத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம். அதற்கென நிர்வாகம் உண்டு. அப்படி இருக்க, நேராக அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் ஸ்டாலின். நல்லவேளை மோடிக்கு கடிதம் எழுதவில்லை” என்று கூறியிருந்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவரின் இந்த கருத்திற்கு, தி.மு.க. மூத்த தலைவரும் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தக்க பதிலடியை கொடுத்துள்ளார். மேலும், விவரங்களுக்கு இருவரின் லிங்க் கீழே

கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it