அட பாவமே: மனுக்கள் நிரம்பிய பெட்டிக்கு இந்த நிலைமையா?

அட பாவமே: மனுக்கள் நிரம்பிய பெட்டிக்கு இந்த நிலைமையா?

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெற்ற மனுக்கள் அடங்கிய பெட்டி டிவி ’ஸ்டாண்டாக மாறிய அவலம்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மாவட்ட வாரியாக தி.மு.க விளம்பர நிகழ்ச்சியினை நடத்தியது. ஆம், அது விளம்பர நிகழ்ச்சியை தவிர வேறொன்றுமில்லை என்பதே பல சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. அந்த அளவிற்கு, தி.மு.க ஆடம்பரமான செலவுகளை செய்தது. ரூபாய் 380 கோடியினை பெற்றுக் கொண்டு, பிரபல அரசியல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனையின் படி இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சொல்வதெல்லாம் பொய் - அம்பலமான தி.மு.க-வின் புகார் பெட்டி தில்லு முல்லு..! -  Mediyaan

தி.மு.க ஆட்சிக்கு வந்து வெகுவிரைவில் ஒர் ஆண்டை பூர்த்தி செய்ய உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. அதிலும் குறிப்பாக, நாங்கள் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் உங்கள் மனுக்களில் உள்ள கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவோம். அப்படி நிறைவேற்றவில்லை எனில் நீங்கள் என்னை நேரடியாக தலைமை செயலகத்தில் சந்திக்கலாம் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுநாள் வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் எத்தனை மக்களை நேரடியாக சந்தித்துள்ளார். மேலும், எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

அந்த வகையில், தி.மு.க தலைவரால் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அடங்கிய பெட்டி. இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் ‘டிவி ஸ்டாண்ட் ஆக மாறி உருமாறி இருப்பது அம்மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியினை பிரபல பத்திரிக்கையான தினமலர் வெளியிட்டுள்ளது.

Image


Share it if you like it