மகளிர் காவலர் பொன்விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றும் போது இந்த காட்சியை பார்க்க பெரியார், அண்ணா, கருணாநிதி இல்லையே என கூறினார்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மகளிர் காவலர் பொன்விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் ;
” பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றி கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தினேன். பெண்களின் தியாகத்தை மதிக்க வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன். “ பெண்கள் கம்பீரமாக அமர்ந்திருப்பதை பார்க்க பெரியார், அண்ணா, கருணாநிதி இல்லையே” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் உரிமைகள் குறித்து அதிகம் பேசுபவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இவரது ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.