அரசு பள்ளியை இடித்து விட்டு திருமண மண்டபமா?: வாய் திறப்பாரா உதயநிதி!

அரசு பள்ளியை இடித்து விட்டு திருமண மண்டபமா?: வாய் திறப்பாரா உதயநிதி!

Share it if you like it

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு திருமண மண்டபம் கட்டபோவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்ககத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் :

சென்னை திருவல்லிக்கேணி பங்காரு தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டிடத்தை இடித்துவிட்டு, திருமண மண்டபம் கட்டப் போவதாக, நாளிதழில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அமைச்சர் திரு. உதயநிதி தொகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் 115 மாணவர்கள் பயின்று வருகின்றனர்

தமிழகத்தில் சுமார் பத்தாயிரம் சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிகளுக்கான இடத்தில், வணிக வளாகங்களை அமைக்கும் எண்ணம் இருந்தால், அது வன்மையான கண்டனத்துக்குரியது.

உடனடியாக, இந்தப் பள்ளி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த பள்ளிகள் அனைத்திற்கும், அதே இடத்தில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என்றும் பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன்.


Share it if you like it