Share it if you like it
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தி.மு.க. மூத்த தலைவரும், மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ( 2011-2015 ) அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. எனினும், தாம் கொடுத்த வாக்குறுதியை செந்தில் பாலாஜி நிறைவேற்றவில்லை. இதையடுத்து, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காவல்துறையில் அவர் மீது புகார் தெரிவித்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாலாஜியின் மீதான மோசடி வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரிக்க வேண்டும். புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
Share it if you like it