கவிஞர் வைரமுத்துவிற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 22-பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, தமிழக அரசின் மெத்தன போக்கினால் இந்த துயர சம்பவம் அரங்கேறி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழல் நிலையில், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரான கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், சாராயத்தை ஒழிக்க மத்திய அரசின் துணை மிகவும் அவசியம் என்பது போல கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கொடுத்த பதிலடி இதோ :
அந்த திரவத்தீயை பரப்பியது மாநில அரசு! அந்த காட்டேரி மாநில அரசின் வருவாய்! நீங்கள் விரும்புவது திமுகவை, பிறகு எப்படி கள்ளச்சாராயமற்ற தமிழகம் சாத்தியம்? கடுமை காட்டினால் லஞ்சமும், ஊழலும் ஒழிந்து விடுமே!! மத்திய அரசை, மாநில அரசு மதித்து வந்தால் சாராயத்தை ஒழித்து விடலாம்.