2,000 ரூயாப் நோட்டு விவகாரம் குறித்து மாநில அரசிடம் ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குள், என்ன அவசரம் என்பது போல அமைச்சரின் கருத்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் : 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும். “இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் ஆலோசித்து அறிவிக்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.
இதனிடையே, தி.மு.க.வின் முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டவர்கள் கடந்த ஒரு வருடத்தில் ரூ.30,000 ஆயிரம் கோடி சேர்த்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு ஏன் இந்த பதற்றம் என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.