தமிழை தேடி ஓடுவது பாசமா… எல்லாம் வேஷம்… ஸ்டாலினுக்கு அண்ணாமலை தரமான பதிலடி!

தமிழை தேடி ஓடுவது பாசமா… எல்லாம் வேஷம்… ஸ்டாலினுக்கு அண்ணாமலை தரமான பதிலடி!

Share it if you like it

2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்ற விவகாரம் தொடர்பாக, கருத்துப் பதிவிட்டிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. மேலு, மக்கள் தாங்கள் வைத்திருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காரணம், கடந்த 3 ஆண்டுகளாகவே சாமானிய மக்கள் மத்தியில் 2,000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் இல்லை என்பதுதான். அதோடு, 2,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் பணக்காரர்களுக்குத்தான் இந்த அறிவிப்பால் பிரச்னை என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முடிவு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், “500 சந்தேகங்கள், 1,000 மர்மங்கள், 2,000 பிழைகள். கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, கடந்த 2019-ம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததையும், தற்போது 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டிருப்பதையும் மையப்படுத்தி, பா.ஜ.க. அரசை குற்றம்சாட்டி இருக்கிறார் ஸ்டாலின்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் ட்விட்டுக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அப்பதிவில், “கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள், உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, தி.மு.க.வினர் நடத்தும் சாராய ஆலைகள், டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி, இவை எல்லாம் மறைக்க நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி. இது பாசமா? எல்லாம் வேஷம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, தமிழகத்தில் நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை மறைக்க தமிழ் என்கிற போர்வைக்குள் தி.மு.க. ஒளிந்து கொள்வதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

அண்ணாமலையில் இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it