ரிசர்வ் வங்கியின் அதிரடி: வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

ரிசர்வ் வங்கியின் அதிரடி: வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

Share it if you like it

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ. 2,000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு, செப்.30-ம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. புழக்கத்தில், இருக்கும் அனைத்து ரூ. 2000 நோட்டுகளையும் அகற்ற முடிவு செய்துள்ளோம். ஆகவே, வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி அறிவிப்பினை வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்புகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து, அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ரூ. 2000 நோட்டுகளை அச்சிடுவது ஏற்கெனவே நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவு சிறந்த நடவடிக்கை. இது மிகவும் வரவேற்கத்தக்கது’ என்று கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.


Share it if you like it