2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை தழுவும் என மூத்த பத்திரிகையாளர் மணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்து 2 வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது. எனினும், மக்கள் விரும்பும் அரசாக இந்த அரசு இல்லை என்பதே பலரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளராக இருப்பவர் மணி. இவர், யூ டியூப் இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ;
2009 – 2014-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஊழலோ ஊழல் மலிந்து கிடந்தது. இதனால், அந்த கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் துடைத்து எறியப்பட்டது. அதன்பிறகு, 2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. இன்றுவரை அந்த கட்சியை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியவில்லை.
2009 – 2014-ல் காங்கிரஸ் கட்சி எப்படி? சரிந்து சின்னா பின்னமாகியதோ அந்த நிலைமையில்தான் தி.மு.க. இன்று உள்ளது. அடுத்த 5 வருடங்களில் 2014-ல் காங்கிரஸ் கட்சிக்கு என்ன? நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமை 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு ஏற்படும் என கூறியுள்ளார்.