ஆறாக ஓடும் ’சரக்கு’: தலைமறைவான கோவன்!

ஆறாக ஓடும் ’சரக்கு’: தலைமறைவான கோவன்!

Share it if you like it

மதுக்கடைகளை மூடுவோம் என தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருப்பதற்கு இன்று வரை பதில் அளிக்காமல் தலைமறைவாக இருக்கும் பாடகர் கோவன்.

கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம், பகுதிக்கு உட்பட்ட தனியார் கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் திறமைகளை முன்னேற்றும் வகையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார். அவரிடம் மாணவிகள் பலவகையான கேள்விகளை எழுப்பி இருந்தனர். அப்போது, ஒரு மாணவி எழுந்து, “தேர்தலின்போது மதுவை ஒழிப்போம் என்று கூறினீர்கள். எப்பொழுது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. குறிப்பாக, போலீஸ்காரர்களே மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, மது விற்பனை நிறுத்தப்படுமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, “தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு பற்றி எதுவும் கூறவில்லையே என்று பகீர் பதிலை எம்.பி கனிமொழி தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில், தி.மு.க டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. மேலும், படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் சொல்லவில்லை என மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயதீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றைய தினம் சட்டசபையில் கூறியிருப்பது சமூக ஆர்லவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு மட்டுமல்ல, தி.மு.க.வினர் நடத்திவரும் மது ஆலைகளையும் மூடுவோம் என்று சொன்னவர் கனிமொழி. அதேபோல, தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட இருக்காது என்று தெரிவித்து இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாட்டுப் பாடி டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக போராடியவர் கோவன். ஆனால், தி.மு.க. அரசோ டாஸ்மாக் கடைகளை மூடாமல் தொடர்ந்து கல்லா கட்டுவதிலேயே இன்று வரை குறியாக இருந்து வருகிறது. இதனை கண்டித்து பாடல் எதுவும் எங்கே தலைமறைவாக கோவன் இருந்து வருகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it