தி.மு.க. மீது ஹிந்துக்கள் வெறுப்பு: இந்து முன்னணி தலைவர் ‘பகீர்’!

தி.மு.க. மீது ஹிந்துக்கள் வெறுப்பு: இந்து முன்னணி தலைவர் ‘பகீர்’!

Share it if you like it

தி.மு.க. அரசு மீது ஹிந்துக்கள் பயங்கர வெறுப்பில் இருக்கிறார்கள். இதனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும் என்று இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக அரசு ஹிந்துக்களுக்கு விரோதமான அரசாக இருக்கிறது. தொடர்ந்து ஹிந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹிந்துக்களை முடக்கும் நோக்கில் ஹிந்து அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளை தடை செய்வது மற்றும் கைது செய்வது போன்ற ஹிந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொண்டு, கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்குச் சென்று உங்களால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இது உங்களுக்கான ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

மேலும், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில்லை. அதேசமயம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் ஹிந்துக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியைச் சந்திக்கும். அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதில் இந்து முன்னணிக்கு உடன்பாடும் விருப்பமும் இல்லை. இந்து முன்னணிக்கும், அக்கட்சிக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேசமயம், அறநிலையத்துறை நிர்வாகம் கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். அறநிலையத் துறைக்கென தனிவாரியம் அமைத்து, அதன் கீழ் கோயில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். நீர் நிலைகள், கோயில் இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடனே அகற்ற வேண்டும். ஆனால், தமிழக அரசு செய்வதில்லை. தமிழகத்திலுள்ள பல கோயில் இடங்களை அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ளதை அகற்றாத தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். கும்பகோணத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை அறநிலையத் துறை செய்து தரவேண்டும். இங்குள்ள புனித் குளமான மகாமக குளத்தை சுத்தமாவும், தூய்மையாகவும் வைத்திருக்கத் தவறினால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.


Share it if you like it