ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு… இல்லாவிட்டால் ஒரு பேச்சு: தி.மு.க.வின் இரட்டை வேடம்!

ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு… இல்லாவிட்டால் ஒரு பேச்சு: தி.மு.க.வின் இரட்டை வேடம்!

Share it if you like it

ஆட்சியில் இல்லாதபோது ஒன்று பேசுவதும் ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றிப் பேசுவதும் தி.மு.க.வுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது என்று நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, உறுதியான நிலைப்பாடு இல்லாத கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. கொள்கை, கோட்பாடு என எதையும் கடைப்பிடிப்பது கிடையாது. ஆட்சியை பிடிக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது பரவலான கருத்தாக இருந்து வருகிறது. இது இன்று நேற்றல்ல, கருணாநிதி தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகிலிருந்தே தி.மு.க. இப்படித்தான் இருந்து வருகிறது. சுயமரியாதை பற்றி வாய்கிழிய பேசுவாராகள். ஆனால், தலைவரின் காலில் விழுந்து அந்த சுயமரியாதைக்கே பங்கம் விளைவிப்பார்கள். சமூகநீதி பற்றி கூக்குரல் எழுப்புவார்கள். ஆனால், பட்டியல் சமுதாயத்தினரை பொதுமேடையிலேயே அவமானப்படுத்துவார்கள்.

பெண்ணுரிமை பற்றி குரல் கொடுப்பார்கள். ஆனால், தி.மு.க. கூட்டத்திலேயே பெண்களின் இடுப்பைக் கிள்ளி சில்மிஷம் செய்வார்கள். ஜாதியை ஒழிப்பாதாகக் கூறுவார்கள். ஆனால், ஜாதிக் கட்சித் தலைவர்களுக்குத்தான் தேர்தலில் சீட் கொடுப்பார்கள். மேலும், எந்தெந்த தொகுதியில் எந்தெந்த ஜாதி ஓட்டுக்கள் அதிகம் இருக்கிறது என்று பார்த்து அந்தக் கட்சியைச் சேர்ந்த நபரை வேட்பாளராக அறிவிப்பார்கள். எம்மதமும் சம்மதம் என்பார்கள். ஆனால், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஹிந்து மத சடங்கு, சம்பிரதாயத்தை விமர்சனம் செய்வார்கள்.

இது மட்டுமா? தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவை அனைத்தும் கடலில் எழுதப்பட்ட வாசகங்களாகி விடும். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கள்து கொள்கை, கோட்பாடு இதுதான். இதை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பார்கள். ஆனால், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, எல்லாவற்றையும் சமரசம் செய்து கொண்டு, ஜாதிக் கட்சிகளுடனும், தங்களது கொள்கை, கோட்பாடுகளுக்கு ஒவ்வாத கட்சிகளுடனும் கூட்டணி வைப்பார்கள்.

இப்படித்தான், 2021-ம் ஆண்டு தேர்தலின்போது வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். உதாரணமாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்றார்கள். ஆனால், மதுக்கடைகள் கூடியிருக்கிறதே தவிர, மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை கொடுப்போம் என்றார்கள். அதைப் பற்றி இதுவரை மூச் காட்டவில்லை. சமையல் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பெட்ரோலுக்கு ரூ.4, டீசலுக்கு ரூ.3 குறைப்போம் என்றார்கள். அந்த வாக்குறுதி என்னானது என்பதே தெரியவில்லை.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்கள். அதுவும் அவ்வளவுதான். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில்தான், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, அரசு எழுதிக் கொடுத்ததை, கவர்னர் அப்படியே வாசிப்பதாகக் கூறி, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார்கள். ஆனால், இன்று தி.மு.க. ஆட்சியில் இருக்கும் நிலையில், அரசு எழுதித் தந்ததை அப்படியே படிக்கவில்லை என்று கவர்னரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இதிலிருந்து தி.மு.க.வின் இரட்டை வேடம் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தி.மு.க.வின் இந்த இரட்டை வேடத்தை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

வாழ்க்கை ஒரு வட்டம்கிறதை இப்பவாவது புரிஞ்சுக்கிட்டா சரி!


Share it if you like it