குடிநீருக்காக மக்கள் தத்தளித்து வரும் சூழலில் அமைச்சருக்காக 5 லாரி குடிநீரை, வீணடித்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

குடிநீருக்காக மக்கள் தத்தளித்து வரும் சூழலில் அமைச்சருக்காக 5 லாரி குடிநீரை, வீணடித்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

Share it if you like it

குடிநீருக்காக மக்கள் தவித்து வரும் சூழலில் அமைச்சரை வரவேற்க குடி தண்ணீரை வீண்டித்த அரசு அதிகாரிகள் மீது மக்கள் கொதிப்பு.

குடிக்க நீர் இல்லை, குழந்தைக்கு கொடுக்க பால் இல்லை, உணவு இல்லை, மின்சாரம் இல்லை, என தங்கள் வேதனையை வெளிப்படுத்தி இருந்தனர் கொளத்தூர் தொகுதி மக்கள். சென்னை மக்கள் மழை நீரில் தத்தளித்து வருவது ஒருபுறம் என்றால், கோவை மாவட்ட மக்களின் நிலை அதை விட மோசமாக உள்ளது என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழக முதல்வரை ஒரு பொருட்டாக மதிக்காமல் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தங்கள் மனம் போன போக்கில் நடந்து கொள்வதாக மக்கள் கடும் குற்றச்சாட்டை விடியல் அரசு மீது சுமத்தி வரும் இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்கும் விதமாக மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை அரசு அதிகாரிகள் சாலையில் கொட்டி வீணடித்த சம்பவம் கோவை மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image


Share it if you like it