புத்தி இருக்கா: ஊரை ஏமாற்ற தான் தீர்மானம் போட்டியா? – தி.மு.க எம்பி ஆவேசம்..!

புத்தி இருக்கா: ஊரை ஏமாற்ற தான் தீர்மானம் போட்டியா? – தி.மு.க எம்பி ஆவேசம்..!

Share it if you like it

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருந்த நிலையில் தி.மு.க எம்பி ஆ.ராஜா ஆவேசமாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அப்பொழுதைய ஆளும் கட்சிக்கு மிக கடுமையாக அழுத்தம் கொடுத்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என உறுதிமொழி அளித்து இருந்தார் ஸ்டாலின்.

கொஞ்சமாவது, வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்க வேண்டும் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அ.தி.மு.க அரசை ஆவேசமாக விமர்சனம் செய்து பேசிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். மேலும் தி.மு.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா நீட் தேர்வை எப்படி? ரத்து செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனை இப்பொழுது பொது வெளியில் என்னால் சொல்ல முடியாது என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 8 மாதங்களை கடந்த பின்பும் கூட ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் இன்று வரை திணறி வருகிறது. இந்த நிலையில் தான் தமிழக அரசின் கோரிக்கையான நீட் சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினம் (பிப். 4.2.2022) அந்த மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார். இந்த நிலையில் தான் நான் எல்லா சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து விட்டேன் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு சாத்தியமே இல்லை அப்பறம் எதற்கு தீர்மானம் போட்ட இது அயோக்கிய தனம் இல்லையா என்று தி.மு.க மூத்த தலைவரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராஜா ஆவேசமாக பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image
Image


Share it if you like it