அரசாங்கம் மதுவை மட்டும்தான் தரமானதாக தருமாம். கல்வி மருத்தும் எல்லாம் தனியார்தான் தருவாங்களாம் என்கிற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம். தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகள்கூட மூடப்படும். ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என்றெல்லாம் ஸ்டாலினும், கனிமொழியும், உதயநிதியும் மற்றும் தி.மு.க. மேல்மட்ட நிர்வாகிகள் பலரும் வாக்குறுதி அளித்தனர். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மதுவை ஒழிப்பதாகக் கூறிவிட்டு, மது விற்பனையை அதிகப்படுத்தி வருகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், அதிக மது விற்பனை செய்த கடைக்கு அவார்டு வழங்கிய கூத்தெல்லாம் அரங்கேறியது.
இந்த நிலையில்தான் மதுவை மையமாக வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். அந்த வீடியோவில், ஒரு நபர் எங்கண்ணே கிளம்பிட்டீங்க என்று கேட்க, கட்சி ஆபீஸில் ஏகப்பட்ட வேலை. இப்பத்தான் முடிந்தது. என் பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டப்போறேன் என்று மற்றொருவர் பதிலளிக்கிறார். அப்போது இடைமறித்த முதல் நபர், ரொம்ப நாளா எனக்கொரு சந்தேகம்ணே, பள்ளிக் கூடமெல்லாம் ஏன்ணே தனியார் நடத்துறாங்க என்று கேட்க, எல்லாருக்கும் தரமான கல்வி கிடைக்கணும்னுதான் என்று பதிலளிக்கிறார் இரண்டாம் நபர்.
தொடர்ந்து, அதேமாதிரி ஆஸ்பத்திரி எல்லாம் ஏன்ணே தனியார் நடத்துறாங்க என்று கேட்க, எல்லாருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கணும்னுதான் என்று பதிலளிக்கிறார். நிறைவாக, அதெல்லாம் சரி, சாராயக் கடையை எதுக்குன்ணே தனியார் நடத்துறாங்க என்று கேட்க, எல்லாருக்கும் தரமான சாராயம் கிடைக்கணும்னுதான் என்று பதிலளிக்கிறார். உடனே முதல் நபர், அரசாங்கத்தால் தரமான கல்வி கொடுக்க முடியாது, தரமான மருத்துவமும் கொடுக்க முடியாது. ஆனால், தரமான சாராயம் மட்டும் குடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்புவதோடு வீடியோ நிறைவடைகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.