காம்ரேடுகளால் தடைபடும் தேசத்தின் வளர்ச்சி!

காம்ரேடுகளால் தடைபடும் தேசத்தின் வளர்ச்சி!

Share it if you like it

தேசிய கல்விக் கொள்கை பற்றி தவறான தகவல்களை பரப்பி தேசத்தின் வளர்ச்சிக்கு தடை போடுகிறார்கள் இடதுசாரிகள் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், “மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்திருக்கிறது. இந்த தேசிய கல்விக்கொள்கை தேசிய வளர்ச்சியின் ‘மகாயானம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார். மேலும், புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது சுதந்திர அமிர்த மஹோத்சவின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்றும் அவர் வலியுறுத்தினார். தவிர, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் தொடங்கப்பட்ட திட்டங்கள், புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் கூறியிருக்கிறார். இக்கல்விக் கொள்கையை பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. வழக்கமாக மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுகூட, புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் நல்ல அம்சங்களை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்திருக்கிறது.

ஆனால், இடதுசாரிகள் தேசிய கல்விக் கொள்கையைப் பற்றி சர்வதேச தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதாவது, தேசிய கல்விக் கொள்கையை காவிமயமாக்கல் என்று குற்றம்சாட்டுகிறார்கள். குறிப்பாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜெ.என்.யு.) மாணவர்களால் தேசிய கல்விக் கொள்கை தவறாக வழிகாட்டப்பட்டு வருகிறது. ஜெ.என்.யு. மாணவர்கள், பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் தேசிய நலன்களை தங்கள் கருவிகள் அடிப்படையிலான பிரசாரத்தின் மூலம் சர்வதேச தளங்களில் எவ்வாறெல்லாம் களங்கப்படுத்த முயன்றனர் என்பதை நாம் அறிவோம். ஆகவே, தற்போது இந்தியாவின் கல்வி முறை மற்றும் மதிப்புகளை உலக நாடுகள் பாராட்டுவதை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே, தேசிய கல்விக் கொள்கையை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். தேசத்தின் குழந்தைகளை இருளிலும், மறுதலிலும் வைத்திருக்கும் வேலையை பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளும், முஸ்லிம் படையெடுப்பாளர்களும் செய்ததைப் போல, தற்போது இடதுசாரிகளின் செய்து வருகிறார்கள். இதனால் தேசத்தின் வளர்ச்சிதான் தடைபடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை” என்றார்கள்.


Share it if you like it