சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜே.பி.நட்டா தி.மு.க.வின் பெயருக்கு புதுமையான விளக்கம் கொடுத்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
பா.ஜ.க. தேசிய தலைவராக இருப்பவர் ஜே.பி.நட்டா. இவர், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அந்தவகையில், பா.ஜ.க.வின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையடுத்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதனை தொடர்ந்து, அவர் பேசும் போது தி.மு.க.வின் பெயருக்கு புதுமையான விளக்கத்தை கொடுத்து இருந்தார்.
அவர் கூறியதாவது ; D-என்பது (Dynasty) வம்சம்… M-என்பது (Money Swindling) பண மோசடி.. K-என்பது (Katta Panchayat) கட்ட பஞ்சாயத்து என குறிப்பிட்டு இருந்தார்.