ஆபாச பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படை!

ஆபாச பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படை!

Share it if you like it

கன்னியாகுமரியில் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது..

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகேயுள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்ட்ரோ. அழகிய மண்டபம் அருகேயுள்ள பிலாங்கலை தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். சர்ச்சுக்கு வருபவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கும் பணியை செய்து வந்த இவர், சில பெண்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறார். மேலும், பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவலயத்துக்கு வந்த சிலர், பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோவை தாக்கி அவரது லேப்டாப்பை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து பாதிரியார் அளித்த புகாரின் பேரில் சட்டக் கல்லூரி மாணவர் ஆஸ்டின் ஜியோ கைது செய்யப்பட்டார். இதன் பிறகு, பாதிரியார் பெனடிக்ட் ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், சில ஆடியோ உரையாடல்களும் வெளியாகின. இதைத் தொடர்ந்து, தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் மீது நர்சிங் மாணவி ஒருவர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். அதேபோல, சென்னையில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், சைபர் க்ரைம் போலீஸில் புகாரி அளித்தார்.

இதையடுத்து, பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களிடம் ஆபாசமாகவும், அவதூறாகவும் நடந்து கொள்ளுதல், சமூக வலைதளங்களை தவறான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கன்னியாகுமரி சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ, தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். பாதிரியார், கேரளா அல்லது பெங்களுரூவில் பதுங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. ஆகவே, மேற்படி இரு இடங்களுக்கும் தனிப்படையினர் சென்று ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். ணேலும், பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோவின் செல்போன் எண் மற்றும் சிக்னல் மூலம் தேடி வருகின்றனர். இதனிடையே, பாதிரியாரால் பாதிக்கப்பட்டவர்கள் கன்னியாகுமரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கலாம் எனவும், புகார் அளிப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமா வைக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.


Share it if you like it